லண்டனில் இளம்பெண்கள் மீது கொலைவெறி தாக்குதல்: பொலிசார் அதிரடி நடவடிக்கை

Report Print Arbin Arbin in பிரித்தானியா

லண்டனில் 2 இளம்பெண்கள் மீது கத்தியால் கொலைவெறி தாக்குதல் நடத்திய இளம்பெண்ணை பொலிசார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.

பிரித்தானிய தலைநகர் லண்டன் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் சமீப காலமாக பொதுமக்கள் மீது கத்தியால் கொலைவெறி தாக்குதல் சம்பவம் அதிகரித்து வருகிறது.

இதில் பலர் படுகாயங்களுடன் தப்பியுள்ள நிலையில் இதுவரை 60 பேர் கொல்லப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் தரப்பு உறுதிப்படுத்தியுள்ளது.

இந்த நிலையில் மேற்கு கென்சிங்டன் பகுதியில் இருந்து மாலை 5.30 மணியளவில் பெருநகர பொலிசாருக்கு தொலைபேசித் தகவல் கிடைத்துள்ளது.

அதில் இரண்டு பெண்கள் கத்தியால் தாக்கப்பட்டு குற்றுயிரான நிலையில் இருப்பதாக கூறப்பட்டிருந்தது.

இதனையடுத்து சம்பவம் நடந்த பகுதிக்கு விரைந்த பெருநகர பொலிசார் அவர்களை மீட்டு ஹெலிகொப்டர் ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனையில் சேர்ப்பித்துள்ளனர்.

இந்த விவகாரம் தொடர்பில் இளம்பெண் ஒருவரையும் கைது செய்துள்ளதாக பொலிஸ் தரப்பு தகவல் வெளியிட்டுள்ளது.

தாக்குதல் நடத்தியதன் காரணம் தொடர்பில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers