பிரித்தானியாவில் நடந்த பரபரப்பு சம்பவம்! ஹோட்டலில் நுழைந்து பெண்ணின் வாயில் துப்பாக்கியை வைத்து மிரட்டிய இளைஞன்

Report Print Santhan in பிரித்தானியா

பிரித்தானியாவில் தந்தை தாயை ஏமாற்றி இன்னொரு பெண்ணுடன் புதிதாக தொடர்பில் இருப்பதாக கூறப்பட்டதால், அந்த பெண்ணின் வாயில் தந்தையின் மகன் துப்பாக்கியை வைத்து மிரட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பிரித்தானியாவின் Weston-super-Mare-ல் உள்ள Bristol ஹோட்டலில் நுழைந்த 22 வயது மதிக்கத்தக்க இளைஞர், திடீரென்று அங்கு உட்கார்ந்திருந்த பெண்ணின் வாயில் துப்பாக்கியை வைத்து மிரட்டியுள்ளார்.

இதனால் பதற்றமடைந்த ஹோட்டல் ஊழியர்கள் உடனடியாக பொலிசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். ஆனால் அந்த இளைஞர் மிரட்டி சண்டை போட்டுவிட்டு சென்றுவிட்டதால், பொலிசார் அங்கிருக்கும் சிசிடிவி கேமராவை வைத்து அந்த இளைஞரை பிடித்து விசாரித்துள்ளனர்.

அதன் பின் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியுள்ளனர். வழக்கை விசாரித்த நீதிமன்றம் அந்த இளைஞருக்கு 18 மாதம் சிறை தண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளது.

இது குறித்து உள்ளூர் ஊடகம் தெரிவிக்கையில், ஹோட்டலில் துப்பாக்கியை வைத்து மிரட்டிய நபரின் பெயர் Joseph Sandic எனவும் 22 வயதான இவரின் தந்தை இரவு சென்றவர் காலை 8 மணியாகியும் வரவில்லை என்று கூறி, அவரின் தாய் மகனிடம் போனில் தொடர்பு கொண்டு வருந்தியுள்ளார்.

அதுமட்டுமின்றி அவர் வேறொரு பெண்ணுடன் ஹோட்டலில் இரவு தங்கியுள்ளார் என்ற தகவலும் தெரியவந்துள்ளது.

அதன் பின் அவரின் மகன் தன் தந்தை வேறொரு பெண்ணுடன் இருக்கும் என்று கூறப்படும் அந்த பெண்ணை கண்டறிந்து, குறித்த ஹோட்டலுக்கு சென்று துப்பாக்கியை வாயில் வைத்து மிரட்டியுள்ளார்.

ஆனால் அவர் பயன்படுத்திய துப்பாக்கி உண்மையான துப்பாக்கி கிடையாது எனவும் போலியான ஒன்று எனவும் அது 3.99 பவுண்ட மதிப்பிற்கு வாங்கப்பட்டது என நீதிமன்றத்தில் அந்த இளைஞன் கூறியுள்ளார்.

இது போன்று நடந்து கொண்டதற்கு மன்னிப்பும் கோரியுள்ளார். ஆனால் நீதிமன்றம் அவருக்கு 18 மாதம் சிறை தண்டனை வழங்கியதுடன், பிரிஸ்டல் ஹோட்டல் உள்ளே நுழைவதற்கு 5 மாத தடையும் விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...