முதல் மனைவிக்கு தெரியாமல் இரண்டாம் திருமணம் செய்த கணவன்: முதல் மனைவி எப்படி கண்டுப்பிடித்தார் தெரியுமா?

Report Print Raju Raju in பிரித்தானியா

பிரித்தானியாவில் முதல் மனைவியை விட்டு பிரிந்து சென்று வேறு பெண்ணை கணவன் திருமணம் செய்த நிலையில், பேஸ்புக் மூலம் முதல் மனைவி அதை கண்டுப்பிடித்துள்ளார்.

பீட்டர் ரிக்டின் என்ற நபருக்கு கடந்த 2000-ஆம் ஆண்டு மஹாலா என்ற பெண்ணுடன் திருமணம் நடந்தது.

2003-ஆம் ஆண்டு வேலை விடயமாக வெளியில் சென்று வருவதாக கூறி சென்ற பீட்டர் பின்னர் வீடு திரும்பவேயில்லை.

இந்நிலையில் பீட்டர் திரும்பி வருவார் என பல ஆண்டுகள் மஹாலா காத்திருந்தும் அதற்கு பயனில்லை.

இதையடுத்து சில ஆண்டுகளுக்கு முன்னர் பீட்டரை விவாகரத்து செய்துவிட வேண்டும் என விரும்பிய மஹாலா அவர் குறித்து பேஸ்புக்கில் தீவிரமாக தேடியுள்ளார்.

அப்போது மஹாலாவுக்கு அதிர்ச்சியான விடயம் காத்திருந்தது.

அதாவது பீட்டர், கெரி என்ற பெண்ணை இரண்டாம் திருமணம் செய்துள்ளதும் அவர்களுக்கு ஒரு குழந்தை இருப்பதும் மஹாலாவுக்கு தெரியவந்தது.

அதே சமயத்தில் பீட்டரின் கொடுமை தாங்காமல் அவரின் இரண்டாவது மனைவி கெரி விவாகரத்து கோரியது தெரியவந்தது.

இது குறித்து மஹாலா நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இதையடுத்து கைது செய்யப்பட்ட பீட்டர் நீதிமன்ற விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார்.

தற்போது வழக்கு விசாரணை முடிந்துள்ள நிலையில் மஹாலாவை ஏமாற்றிய பீட்டருக்கு ஆறு மாதம் சிறை தண்டனையும், £115 அபராதமும் செலுத்த உத்தரவிடப்பட்டுள்ளது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...