20 நிமிடம் குழந்தையை தனியாக விட்டு சென்ற தாய்க்கு காத்திருந்த அதிர்ச்சி!

Report Print Vijay Amburore in பிரித்தானியா

பிரித்தானியாவில் 3 வயது சிறுவனை வீட்டில் தனியாக விட்டு சென்று 20 நிமிடம் கழித்து வந்து பார்த்த தாய்க்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்துள்ளது.

பொதுவாக குடும்பம் என்றாலே வீட்டில் இருக்கும் பெரியவர்கள் குழந்தை பெற்ற பெண்ணுக்கு கூறும் அறிவுரை ஒன்று தான். குழந்தை அமைதியாக தானே இருக்கிறான் என்று நினைத்து மட்டும் அவனை கவனிக்காமல் இருந்துவிட கூடாது. அவன் அமைதியாக இருந்தால் நமக்கு ஏதோ பெரிய வேலை இழுத்து விட போகிறான் என அர்த்தம் என கூறுவார்.

அந்த வகையில் பிரித்தானியாவின் Hampshire பகுதியில் ஒரு சம்பவம் நிகழ்ந்துள்ளது. அந்த சம்பவம் குறித்த புகைப்படத்தினை சமூக வலைதளத்தில் வெளியிட்ட தாய் நெகிழ்ந்துள்ளார்.

சம்பவம் நிகழ்ந்த அன்று, 3 வயது சுட்டி பையன் Harrison Bird-ன் தாய் Clare Fallon (32) சிறுவனை வீட்டில் தனியாக விட்டு வெளியேறியுள்ளார்.

தன்னுடைய கூந்தலை உலர வைப்பதற்காக சென்றவர் 20 நிமிடம் கழித்து அறைக்கு திரும்பும்பொழுது ஒரு பெரும் அதிர்ச்சி காத்திருந்துள்ளது. அறையில் அமைதியாக இருந்த அந்த சிறுவன், கீழ் அலமாரியில் இருந்த சாக்லேட் க்ரீமை எடுத்து வீடு முழுவதும் நாசம் செய்துவிட்டு தன்னுடைய உடல் முழுவதும் பூசி விளையாடியுள்ளான்.

இதனால் கோபமடைந்த Clare பெரும் கோபத்துடன் சிறுவனை திட்டியுள்ளார். இதனால் தாங்க முடியாத அந்த சிறுவனும் கோபத்தில் அழுதுள்ளான்.

இதனையடுத்து சிறுவனை குளிப்பாட்டியதோடு, வீடு முழுவதும் கொட்டிக்கிடந்த சாக்லேட் க்ரீமை 10 நிமிடங்களாக சுத்தம் செய்துள்ளார்.

சம்பவம் நிகழ்ந்த அன்று தனக்கு அதிகமான கோபம் வந்தாலும், தற்போது அந்த புகைப்படத்தினை பார்க்கும் போதெல்லாம் தனக்கு சிரிப்பு வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers