சிறார் ஆபாச படங்களை பார்வையிடுவோருக்கும் இனி கடுமையான தண்டனை

Report Print Balamanuvelan in பிரித்தானியா
453Shares
453Shares
ibctamil.com

இனி சிறார் ஆபாச படங்களை பார்வையிடுவோரும் பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக கருதப்பட்டு கடுமையாக தண்டிக்கப்படுவர் என பிரித்தானிய நீதித்துறையின் உயர் பொறுப்பான Solicitor General என்னும் பொறுப்பிலிருக்கும் Robert Buckland தெரிவித்துள்ளார்.

அவர் முன்வைத்துள்ள திட்டங்களின்படி சிறார் ஆபாச படங்களை பார்வையிடுதலும் இனி ULS எனப்படும்கொலை, பாலியல் வன்புணர்வு போன்ற குற்றங்களுக்கு ஈடாக கருதப்பட்டு, பொது மக்களில் யாராவது Attorney Generalஇடம் முறையீடு செய்யும்போது அந்த வழக்கு நீதி மன்றத்தின் மேல் முறையீட்டுக்கு கொண்டு செல்லப்பட்டு அந்த தண்டனை போதுமா அல்லது அது அதிகரிக்கப்பட வேண்டுமா என்பது முடிவு செய்யப்படும்.

கடந்த ஆண்டு மட்டும் 2,528 பேர் சிறார்களின் ஆபாசப் படங்களை டவுன்லோடு செய்ததற்காக தண்டிக்கப்பட்டனர்.

அவர்களில் கால்வாசிப்பேர் சிறைக்கு அனுப்பப்பட்டனர், பலருக்கு சமுதாய சேவைகள் தண்டனையாக அளிக்கப்பட்டது.

இது குறித்து பேசிய Robert Buckland, இணையம் குழந்தைகளை துஷ்பிரயோகம் செய்பவர்களுக்கு ஒரு வாசலாக செயல்படுகிறது.

குழந்தைகள் துஷ்பிரயோகம் செய்யப்படுகிறார்கள், அதைப் பயன்படுத்தி ஒரு கூட்டம் பணம் சம்பாதிக்கிறது, இனி இத்தகைய குற்றங்கள்மீது நீதிமன்றங்கள் கடுமையாக நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்