விஜய் மல்லையாவை அடைக்க இருக்கும் சிறையின் வீடியோ வெளியீடு: என்னென்ன வசதிகள் உள்ளது தெரியுமா?

Report Print Raju Raju in பிரித்தானியா

மோசடி வழக்கில் சிக்கியுள்ள தொழிலதிபர் விஜய் மல்லையாவை நாடு கடத்தும் பட்சத்தில், அவர் அடைக்கப்பட உள்ள சிறையின் வீடியோ பிரித்தானியா நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.

இந்திய வங்கிகளில் 9000 கோடிகள் கடன் வாங்கிய விஜய் மல்லையா அதை திரும்ப செலுத்தாமல் லண்டனுக்கு தப்பியோடினார்.

அவர் மீது பிரித்தானியா நீதிமன்றத்தில் வழக்கு நடந்து வருகிறது.

இந்நிலையில் அவரை நாடுகடத்தும் பட்சத்தில் மும்பை ஆர்தர் சாலை சிறையில் அடைக்கப்படுவார் என வெஸ்ட்மினிஸ்டர் நீதிமன்றத்தில் சிபிஐ தகவல் தெரிவித்தது.

இதையடுத்து சிறையில் உள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள், வசதிகள் குறித்த வீடியோவை நீதிமன்றத்தில் சமர்பித்துள்ளது.

அதில் 12ம் எண் அறையில் போதிய சூரிய வெளிச்சம் வருவது காட்டப்பட்டுள்ளது. மேலும் தனியாக கழிவறை, தொலைக்காட்சி பெட்டி, சுத்தமான படுக்கை, தலையணை போன்ற வசதிகள் மல்லையாவுக்கு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...