இங்கிலாந்தில் புகையிலைக்காக இந்தியரை கொலை செய்த சிறுவனுக்கு சிறை

Report Print Vijay Amburore in பிரித்தானியா

இங்கிலாந்தில் புகையிலை தர மறுத்ததால் இந்திய கடைக்காரரை கொலை செய்த 16 வயது சிறுவனுக்கு நீதிமன்றம் சிறை தண்டனை விதித்துள்ளது.

இங்கிலாந்தின் லண்டன் பகுதியில் இந்தியாவை சேர்ந்த விஜய் குமார் படேல் (49) என்பவர் கடை ஒன்று நடத்தி வந்துள்ளார். கடந்த ஜனவரி 6-ம் திகதி மது போதையில் மூன்று இளைஞர்கள் கடைக்கு வந்து புகையிலை கேட்டுள்ளனர்.

ஆனால் அவர்கள் மூண்டு பேரும் 18 வயதிற்கு கீழ் இருந்ததால், புகையிலை கொடுக்க விஜய் குமார் மறுப்பு தெரிவித்துள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த இளைஞர் ஒருவர் கொடூரமாக விஜய் குமார் மீது தாக்குதல் நடத்தியுள்ளார். இந்த தாக்குதலில் தலைப்பகுதியில் பலத்த காயமடைந்ததால், விஜய் தரையில் சுருண்டு விழுந்தார்.

இதற்கிடையில் சத்தம் கேட்டு ஓடி வந்த பக்கத்து கடைக்காரர், மூன்று இளைஞர்களையும் துரத்தி பிடிக்க முற்பட்டபோது, மூவரும் கேலி செய்து, சிரித்துக்கொண்டே அங்கிருந்து தப்பி சென்றுவிட்டனர்.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார், ரத்தம் வெளியேறிய நிலையில் மயங்கி கிடந்த விஜய் குமாரை மீட்டு லண்டனில் உள்ள செயின்ட் மேரிஸ் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு அனுமதிக்கப்பட்ட விஜய் மறுநாளே சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இந்த நிலையில் இதுதொடர்பான வழக்கு நீதிபதி Stuart-Smith முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. இதனை விசாரித்த நீதிபதி குற்றவாளிக்கு 4 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers