லண்டனில் பட்டப்பகலில் மீண்டும் ஒரு கத்திக் குத்து சம்பவம்: குற்றவாளியின் படம் வெளியானது

Report Print Balamanuvelan in பிரித்தானியா
389Shares
389Shares
lankasrimarket.com

லண்டனில் காலை நேரத்தில் பெண் ஒருவர் கத்தியால் குத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

30 வயது மதிக்கத்தக்க ஒரு பெண் இன்று காலை 9.30 மணியளவில் கத்தியால் குத்தப்பட்டார்.

முதுகில் பலத்த காயங்களுடன் அவர் ஹெலிகொப்டர் உதவியுடன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பாக பொலிசார் Peter Morley (35) என்னும் நபரின் புகைப்படத்தை வெளியிட்டுள்ளனர்.

அவனைக் கண்டுபிடிப்பவர்கள் உடனடியாக பொலிசாருக்கு தகவல் அளிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

அவன் மிகவும் ஆபத்தானவன் என்பதால் அவனை நெருங்க வேண்டாம் என்றும் பொலிசார் எச்சரித்துள்ளனர்.

இதற்கிடையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள பெண்ணுக்கு தற்போதைக்கு உயிருக்கு ஆபத்து எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை என்று பொலிசார் தெரிவித்துள்ளனர்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்