மகளை பாலியல் வன்கொடுமை செய்தவர் இளவரசர் ஹரிக்கு இராணுவ பயிற்சியளித்த வீரர்: 17 ஆண்டுகள் சிறை

Report Print Deepthi Deepthi in பிரித்தானியா

பிரித்தானிய இராணுவத்தில் இளவரசர் ஹரிக்கு பயிற்சி அளித்த அதிகாரி ஒருவர் தனது மகளை சிறுவயதில் பாலியல் வன்கொடுமை செய்த குற்றத்திற்காக 17 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

Wayne Domeney(51) என்ற நபர் பிரித்தானிய இராணுவத்தில் பாராசூட் வீரராக 23 ஆண்டுகளாக பணியாற்றியுள்ளார்.

இவர், பிரித்தானிய இளவரசர் ஹரிக்கு இராணுவத்தில் பயிற்சி அளித்துள்ளார். மேலும் இளவரசர் சார்லஸ் மற்றும் பிரித்தானிய மகாராணியுடன் ஒரு முறை தேநீர் அருந்தும் வாய்ப்பு இவருக்கு கிடைத்துள்ளது.

பிரித்தானிய இராணுவம் சார்பில் பல நாடுகளுக்கு இவர் சென்றுள்ளார். பணி ஓய்வு பெற்றுள்ள இவர் மீது இவரது வளர்ப்பு மகள் Louise Richards 2013 ஆம் ஆண்டு தனது தந்தை மீது பாலியல் புகார் அளித்தது பரபரப்பை ஏற்படுத்தியது.

தனக்கு 12 வயது இருக்கையில், தனது தந்தை பலமுறை தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக புகார் அளித்திருந்தார். தற்போது அவரது வயது 18. இது தொடர்பாக வீரர் Wayne மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வந்த நிலையில், அவர் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டதையடுத்து, அவருக்கு 17 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மகள் Louise Richards கூறியதாவது, 2010 ஆம் ஆண்டு எனது அம்மாவுக்கும், இவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. எனது அம்மா இவருடன் மகிழ்ச்சியாக இருந்தது. அந்த சமயத்தில் தான் இவர் என்னை பாலியல் வன்கொடுமை செய்தார்.

சில காலம் கழித்து இவர் எனது அம்மாவை விட்டு பிரிந்து அவரது குடும்பத்துடன் சென்றுவிட்டார். எனக்கு சிறுவயதில் இவரால் நடந்த கொடுமையை என்னால் மறக்க இயலவில்லை. எனது வாழ்நாளில் இவரது முகத்தை இனி பார்க்க விரும்பவில்லை என கூறியுள்ளார்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers