பிரித்தானியாவில் நடந்த அதிர்ச்சி சம்பவம்! மகளை கொலை செய்வதற்கு முன் அவருடன் ஜாலியாக ஷாப்பிங் செய்த தந்தை வீடியோ

Report Print Santhan in பிரித்தானியா

பிரித்தானியாவில் மகளை குத்தி கொலை செய்வதற்கு முன் அவருடன் தந்தை ஜாலியாக ஷாப்பிங் செய்த வீடியோவை பொலிசார் வெளியிட்டுள்ளனர்.

பிரித்தானியாவின் Brownhills பகுதியைச் சேர்ந்தவர் William Billingham. 54 வயதான இவர் கடந்த ஜனவரி மாதம் தன்னுடைய 8 வயது மகள் Mylee-ஐ கொடூரமாக குத்தி கொலை செய்தார்.

இந்த அதிர்ச்சி சம்பவத்தையடுத்து கைது செய்யப்பட்ட அவர் தொடர்பான வழக்கு Birmingham Crown நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் மகளை குத்தி கொலை செய்வதற்கு இரண்டு மணி நேரங்களுக்கு முன்னர் William Billingham தன்னுடைய மகள் Mylee-யுடன் அங்கிருக்கும் கடை ஒன்றிற்கு ஷாப்பிங் சென்றுள்ளார்.

அப்போது அங்கு Mylee சிரித்த முகத்துடன் தனக்கு தேவையான பொருட்களை வாங்கினார். உடன்William Billingham இரண்டு பாட்டில் தண்ணீர் 4 பாட்டில் பீர் போன்றவையும் வாங்கியுள்ளார்.

இந்த வீடியோவை பொலிசார் நீதிமன்றத்தில் போட்டு காண்பித்துள்ளார். இதைத் தொடர்ந்து இந்த வழக்கு விசாரணை நீதிமன்றத்தில் தொடர்ந்து நடைபெறவுள்ளதாக உள்ளூர் ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.

மேலும் William Billingham தனது மனைவி டிரேஷியுடன் Brownhills பகுதியில் ஒன்றாக வசித்து வந்தார். இவர்களுக்கு Mylee(8) உட்பட மூன்று பிள்ளைகள் உள்ளனர்.

இந்நிலையில் வில்லியமுக்கும், டிரேஷியவுக்கும் இடையில் கருத்துவேறுபாடு ஏற்பட்டதால் இருவரும் பிரிந்தனர்.

கணவனை பிரிந்த டிரேஷி ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்டு வந்தார். இந்த தகவல் வில்லியம்சுக்கு தெரியவர ஆத்திரமடைந்த அவர் மனைவியை பழிவாங்க அவர் வீட்டுக்கு வந்துள்ளார்.

அப்போது அங்கு இருந்த தனது மகள் Mylee-ஐ கத்தியால் குத்தி கொலை செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers