பக்கிங்காம் அரண்மனை அறையை விட்டு வெளியேறும் பிரித்தானியா மகாராணி! வெளியான முக்கிய தகவல்

Report Print Santhan in பிரித்தானியா

அரண்மனை சீரமைப்பு பணி காரணமாக பிரித்தானியா மகாராணி மற்றும் அவரது கணவர் அறையை விட்டு வெளியேறவுள்ளதாக தகவல் வெளியாகிவுள்ளது.

பிரித்தானியாவின் தலைநகரான லண்டனில் Buckingham அரண்மனை உள்ளது. இங்கு மறுசீரமைப்பு பணி கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் நடைபெற்றது.

அங்கிருக்கும் மின்சாரம் செல்லும் வயர்கள் போன்றவை மிகவும் பழையனவாக இருப்பதால் மாற்றம் செய்யப்பட்டு வருகிறது.

ஏனெனில் பெருவெள்ளம், தீ விபத்து போன்றவைகளிலிருந்து காப்பதற்காக இந்த சீரமைப்பு பணி நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சீரமைப்பின் போது கடந்த ஜனவரி மாதம் நிறைய சிகரெட் பாக்கெட்டுகள் மற்றும் 120-ஆண்டுகள் பழமையான செய்தித்தாள்கள் போன்றவை இருந்ததாகவும் செய்திகள் வெளியாகின. இது முதல் கட்டமாக நடைபெற்றுள்ளது.

இந்நிலையில் இந்த அரண்மனையில் பிரித்தானியா மகாராணி மற்றும் அவரது கணவர் பிலிப் தங்கியிருந்த அறைக்கான மறுசீரமைப்பு பணி 2025-ஆம் ஆண்டு நடைபெறவுள்ளது.

இது சுமார் இரண்டு ஆண்டுகளுக்கு நடைபெறும் என்பதால், அவர்கள் தாங்கள் தங்கியிருக்கும் அறையை விட்டு வெளியேறவுள்ளனர்.

இருப்பினும் அவர்கள் அதே அரண்மனையில் தான் இருப்பார்கள் எனவும் ஆனால், அதற்கான முடிவு இன்னும் உறுதி செய்யப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது, மேலும் இந்த அரண்மனை மறு சீரமைப்பு செய்வதற்கு £369 மில்லியன் ஆகும் என்று மதிப்பிட்டுள்ளதாக உள்ளூர் ஊடகம் தெரிவித்துள்ளது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்