டயானாவுடனான திருமண நிச்சயதார்த்தத்தை நிறுத்த விரும்பினேன்: முதன்முறையாக மௌனம் கலைக்கும் இளவரசர் சார்லஸ்

Report Print Balamanuvelan in பிரித்தானியா

இளவரசர் சார்லசுடனான திருமண வாழ்வைக் குறித்து இதுவரையில் இளவரசி டயானா கூறிய பல சோகமான விடயங்களே வெளியாகி வந்த நிலையில், முதன்முறையாக இளவரசி டயானாவுடனான தனது உறவு குறித்து மௌனம் கலைத்திருக்கிறார் சார்லஸ்.

இளவரசர் சார்லசின் 70 பிறந்தநாளையொட்டி அவரது வாழ்க்கை சரிதம் ஒரு புத்தகமாக வெளியாகவுள்ளது.

அந்த புத்தகம் சார்லஸ் டயானா குறித்து இதுவரை உலகம் அறியாத பல அதிர்ச்சி தகவல்களை தன்னகத்தே கொண்டுள்ளது.

அந்த புத்தகத்தில் அதிரடியாக சில உண்மைகளை வெளியிட்டுள்ளார் சார்லஸ்.

திருமணத்திற்குமுன் சில முறையே, தான் டயானாவை சந்தித்திருந்த நிலையில் தனது நிச்சயதார்த்தம் நடைபெற்றதாகவும், அதற்குப்பின் டயானாவை தான் சந்தித்த ஒவ்வொரு முறையும் தங்களுக்குள் எந்த ஒற்றுமையும் இல்லை என்பதைத் தான் தெளிவாக உணர்ந்ததாகவும் தெரிவித்துள்ளார் சார்லஸ்.

திருமணமாகி பல ஆண்டுகளான பின்னும் தோல்வியின் பாதையிலேயே துயரத்துடன் பயணித்த தனது திருமண வாழ்வைக் குறித்து தனது நண்பர்களிடம் கண்ணீர் விட்டுக் கதறியிருக்கிறார் சார்லஸ்.

1981ஆம் ஆண்டு என்னுடைய திருமணத்திலிருந்து எப்படியாவது வெளியேறிவிட வேண்டுமென்று எவ்வளவோ விரும்பினேன் என்று சார்லஸ் கூறியுள்ளதாக அந்த புத்தகம் கூறுகிறது.

நிச்சயதார்த்தத்துக்குப் பின் டயானாவுடன் பழகும்போதுதான் தங்களுக்குள் எவ்வளவு வேறுபாடுகள் என்பதை அறிய முடிந்ததாகவும் எப்படியாவது திருமணத்தை நிறுத்திவிட வேண்டும் என்றும் எண்ணியும்,

தன்னாலோ தனது பெற்றோராலோ கூட அது முடியாமல் போனது என்றும் ஏனென்றால் ராஜ குடும்ப திருமணம் ஒன்று நின்று போனால் அது எவ்வளவு பெரிய பிரச்சினையை ஏற்படுத்தும் என்பதை நன்கறிந்திருந்ததால் தன்னால் எதுவும் செய்யக்கூடாத நிலைமையில் இருந்ததாகவும் தெரிவித்துள்ளார் சார்லஸ்.

தன்னைக் குறித்து டயானா கூறியுள்ள அப்பட்டமான வேதனையை உண்டாக்கும் பொய்களைக் குறித்த உண்மைகளை வெளியாக்க விரும்பியுள்ளார் என்பதைக் குறித்தும் அந்த புத்தகம் தெளிவாக விளக்குகிறது.

தான் திருமணத்திற்குமுன் திருட்டுத் தனமாக டயானாவை ராஜ ரயிலில் அழைத்துச் சென்றதாகவும், கமீலாவை திருட்டுத்தனமாக மாளிகைக்கு வரவழைத்ததாகவும் கூறப்பட்டுள்ள அனைத்தும் டயானாவால் புனையப்பட்ட கதைகள் என்கிறார் சார்லஸ்.

அந்த புத்தகம் வெளியாகும்போது இதுவரை டயானா சார்லஸ் குறித்து மக்கள் கொண்டிருந்த பல எண்ணங்கள் வித்தியாசமான கோணத்தில் பார்க்கப்படும் என்றே தோன்றுகிறது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்