வித்தியாசமான கெட் அப்பில் இளவரசர் ஹரியும் மேகனும்: கேக் பிரியர்களுக்கு அளித்த இனிப்பான செய்தி

Report Print Balamanuvelan in பிரித்தானியா

பிரித்தானிய இளவரசர் ஹரியையும் அவரது காதல் மனைவி மேகனையும் ஒரு வித்தியாசமான தோற்றத்தில் பார்க்கும் வாய்ப்பு பிரித்தானியர்களுக்கு கிடைத்தது.

இங்கிலாந்தின் Birminghamஇல் நடைபெற்ற ஒரு கேக் கண்காட்சியில் இளவரசர் ஹரியும் மேகனும் கேக் வடிவில் நின்றிருந்தார்கள்.

பிரபல கேக் கண்காட்சி ஒன்றிற்காக Lara Mason என்னும் கேக் வடிவமைப்பாளர் அந்த கேக்கை வடிவமைத்திருந்தார்.

அதற்காக அவர் 300 முட்டைகளையும் 50 கிலோ ஐஸிங்கையும் பயன்படுத்தியிருந்தார். 250 மணி நேரம் செலவிட்டு அந்த கேக்கை வடிவமைத்த Lara Masonஇடம் அது உண்ணத்தக்கதா என்று கேட்டதற்கு, பிரேமைத்தவிர அனைத்தையும் உண்ணலாம் என்றார் அவர்.

ஏற்கனவே இளவரசர் ஜார்ஜை 30 மணி நேரம் செலவிட்டு கேக்காக வடிவமைத்திருந்த Lara Mason, தற்போது ஹரியையும் மேகனையும் கேக்காக வடிவமைத்துள்ளார்.

அதே கேக் கண்காட்சியில் இளவரசி டயானா தனது சிறு வயது மகன்களான வில்லியம் மற்றும் ஹரியுடன் இருக்கும் ஒரு கேக்கும் இடம்பெற்றுள்ளது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers