ஆச்சரியபட வைக்கும் உயிர்களை பாதுகாத்த ஓசை சுவர்கள்

Report Print Gokulan Gokulan in பிரித்தானியா

பிரித்தானியாவில் போர்காலத்தில் எதிரி நாட்டு படைகளின் வருகையை அறிய ஓசை எழுப்பும் சுவர் கண்ணாடியால் அமைக்கப்பட்டுள்ளது.

பிரித்தானியாவில் மஜ் வில்லியம் சன்சோமால் என்பவரால் வடிவமைக்கப்பட்டது தான் இந்த ஓசை எழுப்பும் சுவர்கள், இது ரேடார் கண்டுபிடிப்புக்கு முன்னர் பயன்பாட்டில் இருந்துள்ளது.

இதன்வடிவம் குழி போன்று கண்ணாடியால் அமைக்கப்பட்டிருக்கும். இதனால் தூரத்திலிருந்து வரும் எதிரிநாட்டு படைகளின் ஒலியை கணிக்க முடியும்.

இதன் ஒலி மூலம், பிரிட்டன் தரைப்படையினரை போருக்கு தயார்படுத்த பிரித்தானிய அரசு செயல்படுத்தி உள்ளது. இதனால் தான் பல உயிர்கள் பாதுகாக்கப்பட்டுள்ளதாக ஜோபிட்டன் ஸ்மித் என்பவர் தெரிவித்துள்ளார்.

ஜோபிட்டன் ஸ்மித் என்பவர் தன் குடும்பத்தினருக்கும் போருக்குமான தொடர்பு குறித்து ஆய்வு செய்த போது இந்த சுவர் குறித்து தெரிந்து கொண்டுள்ளார்.

அவர் அழிந்து போன சுவர் தவிர மீதம் இருந்த சுவரை பல இடங்கள் அலைந்து திருந்து புகைப்படங்களும் எடுத்து பதிவிட்டுள்ளார்.

போரிலிருந்து பாதுகாக்க சீன பெரும் சுவர் அமைக்கப்பட்டிருப்பதை கேள்விபட்டிருப்போம். ஆனால் இது போன்று அழிந்த நிலையில் உள்ள சுவர்களுக்கு பல வரலாறு இருக்கும் என்பதில் மாற்று கருத்து இல்லை.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers