புத்தாண்டில் இறந்த தாயை கேட்டு அடம்பிடிக்கும் குழந்தைகள்: கண்ணீர் விடும் பாட்டி

Report Print Vijay Amburore in பிரித்தானியா

பிரித்தானியாவில் புத்தாண்டு தினத்தன்று உடல்நலக்குறைவால் உயிரிழந்த பெண்ணின் குழந்தைகள் இரண்டு பேரும் தாயை கேட்டு அடம்பிடிப்பதாக அர்களுடைய பாட்டி வேதனை தெரிவித்துள்ளார்.

வடக்கு லண்டனில் உள்ள ஹாரோவில் பகுதியை சேர்ந்தவர்கள் ஆஷ் செக்கோசர் (54) மற்றும் சாரா கிரண்டி(51) தம்பதியினர்.

இவர்களுடைய 28 வயதான ஆஷ்லே கிரண்டி என்கிற மகளுக்கு 6 மற்றும் 3 வயதில் ஒரு மகளும் மகனும் உள்ளனர்.

ஆஷ்லே கிறிஸ்துமஸ் தினம் முடிந்த சில நாட்களிலே உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்துள்ளார். புத்தான்டு தினத்தன்று அதன் தீவிரம் அதிகமாகியதால் கொண்டாட முடியாமல் மாடியிலே படுத்திருந்துள்ளார்.

எதேச்சையாக அவருடைய பெற்றோர்கள் மேலே சென்று பார்க்கும்போது ஆஷ்லே இறந்த நிலையில் கிடந்துள்ளார்.

இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த தம்பதியினர், "அம்மா" என அழைத்தவரே மாடிக்கு ஓடிவந்த இரண்டு குழந்தைகளையும் தூரமாக அழைத்து சென்றனர்.

இந்த சம்பவம் அறிந்து வந்த பொலிஸார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். அவருடைய மரணத்தில் எந்த மர்மமும் இல்லாத போதும் கூட, இறப்பிற்கான காரணம் கண்டறியமுடியாததால் பொலிஸார் திணறி வருகின்றனர்.

மேலும், விரைவில் வரவுள்ள முதற்கட்ட பிரேத பரிசோதனை அறிக்கைக்காக காத்திருக்கின்றனர்.

இந்த நிலையில் சம்பவம் குறித்து பேசியுள்ள ஆஷ்லேவின் பெற்றோர், எங்களுடைய பேரக்குழந்தைகள் இரண்டு பேரும் அடிக்கடி அம்மாவை கேட்டு அடம்பிடிப்பார்கள்.

அவர் சொர்க்கத்திற்கு சென்றுவிட்டார் என நாங்கள் கூறினால், போன் செய்து கொடுங்கள் அம்மாவிடம் பேச வேண்டும் என கேட்கிறார்கள்.

சொர்க்கத்தில் யாரும் போன் பயன்படுத்தக்கூடாது என நானும் சமாளித்து வருகிறேன் என வேதனை தெரிவித்துள்ளார்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்