பிரித்தானியாவின் பரபரப்பான சாலையில் இளம் தாயாருக்கு நேர்ந்த துயரம்: உயிருக்கு போராடும் பச்சிளம் குழந்தை

Report Print Arbin Arbin in பிரித்தானியா

பிரித்தானியாவின் தென் கிழக்கு லண்டனில் சாலை விபத்தில் சிக்கி இளம் தாயார் ஒருவர் பரிதாபமாக பலியான நிலையில் அவரது பச்சிளம் குழந்தை உயிருக்கு போராடுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

தென் கிழக்கு லண்டனில் உள்ள Penge பகுதியில் நேற்றிரவு சுமார் 8 மணியளவில் இந்த கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது.

தமது தாயாரின் குடியிருப்புக்கு சென்றுவிட்டு 8 மாத குழந்தையுடன் தனது குடியிருப்புக்கு 23 வயதான நிக்கோல் நியூமன் திரும்பிக்கொண்டிருந்தார்.

அப்போதே பரபரப்பான சாலையில் இந்த கோர விபத்து நடந்துள்ளது. இதில் படுகாயமடைந்த நியூமன் சாலையிலேயே பரிதாபமாக மரணமடைந்துள்ளார்.

அவரது பச்சிளம் குழந்தை படுகாயத்துடன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு ஆபத்தான நிலையில் சிகிச்சைபெற்று வருகிறது.

விபத்து நேர்ந்த நிலையில் குற்றுயிராக மீட்கப்பட்ட நியூமன் கடைசியாக வாய்விட்டு கதறியது மகன் எங்கே என்பது தான் என அதிர்ச்சியில் உறைந்த பார்வையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

வாகனம் மோதியதில் தூக்கி வீசப்பட்ட குழந்தையை சாலையில் சென்றுகொண்டிருந்த நபர் ஒருவர் ஆபத்தான நிலையில் மீட்டுள்ளார்.

தகவல் அறிந்து விரைந்து வந்த மருத்துவ உதவிக்குழுவினர் தாயாரை மீட்க போராடியுள்ளனர் ஆனால் அவர் சாலை ஓரத்திலேயே பரிதாபமாக பலியாகியுள்ளார்.

விபத்தை ஏற்படுத்திய 51 வயது கார் ஓட்டுனரும் காயங்களுடன் மருத்துவமனையில் சேர்ப்பிக்கப்பட்டுள்ளார். சிகிச்சைக்கு பின்னர் அவர் விடுவிக்கப்பட்டாலும் அவரை இதுவரை கைது செய்யவில்லை என பொலிசார் தெரிவித்துள்ளனர்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்