பிஞ்சுக்குழந்தைக்கு உணவு கொடுக்காமல் பட்டினி போட்டு கொன்ற தாய்: நீதிமன்றம் விதித்த கடும் தண்டனை

Report Print Vijay Amburore in பிரித்தானியா

மகனை பட்டினி போட்டு கொன்ற பிரித்தானிய தாய்க்கு 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

பர்மிங்காம் பகுதியை சேர்ந்த ஏஞ்சல் பூலே என்கிற 25 வயது தாய், கடந்த 2016ம் ஆண்டு ஆம்புலன்ஸ் நிர்வாகத்திற்கு போன் செய்து திடீரென என்னுடைய குழந்தை மூச்சு விட திணறுகிறது என தெரிவித்துள்ளார்.

உடனே மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட குழந்தை, சிகிச்சை அளித்துக்கொண்டிருக்கும் போதே பரிதாபமாக உயிரிழந்தது.

பின்னர் நடத்தப்பட்ட பிரேத பரிசோதனையில், குழந்தைக்கு உணவு கொடுக்காமல் பட்டினி போட்டு கொன்றிருப்பதாக தெரியவந்தது.

இதுகுறித்து பொலிஸார் விசாரணை மேற்கொண்ட போது, குழந்தை பிறக்கும் போது 2.3 கிகி எடை இருந்துள்ளது. ஆனால் இறக்கும் பொழுது அதில் பாதி எடையில் தான் இருந்துள்ளது.

குழந்தை இறப்பதற்கு சில நாட்களுக்கு முன்பு எடுக்கப்பட்ட புகைப்படத்தை சமூகவலைத்தளத்தில் பதிவிட்ட, குழந்தையின் தந்தை மனைவி வேண்டுமென்றே கொன்றுவிட்டதாக குற்றம் சாட்டினார்.

சம்பவம் குறித்து மருத்துவர்கள் கூறுகையில், குழந்தை பிறந்த 7 நாட்களுக்கு பிறகு முதல் பரிசோதனைக்காக மருத்துவமனை கொண்டுவரப்பட்டது.

அப்போது நலமாக தான் இருந்தது. ஆனால் அதன்பிறகு ஒருமுறை கூட குழந்தையை மருத்துவமனைக்கு கொண்டு வரவில்லை என தெரிவித்தார்.

இந்த நிலையில் வழக்குகளை கேட்டறிந்த நீதிபதி, குழந்தையின் இறப்புக்கு காரணமான ஏஞ்சலுக்கு 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers