லண்டனில் தொடரும் கொலை சம்பவம்... இருவேறு இடங்களில் கத்திக்குத்து, துப்பாக்கி சூடு!

Report Print Vijay Amburore in பிரித்தானியா
204Shares

லண்டனில் ஒரே நேரத்தில் இருவேறு இடங்களில் துப்பாக்கிசூடு மற்றும் கத்திக்குத்து சம்பவம் நடைபெற்றுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது..

லண்டனின் ஃப்ரேர் மியூஸ் பகுதியில் மாலை 4 மணியளவில் துப்பாக்கியுடன் மர்ம நபர் தாக்குதல் நடத்துவதாக பொலிஸாருக்கு தகவல் கிடைத்தது.

அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார், பலத்த காயங்களுடன் கிடந்த நபரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அவர் அடுத்த சில நிமிடங்களில் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

இதேபோல சம்பவம் நடைபெற்ற இடத்திலிருந்து 10 மைல்கல்கள் தூரத்தில் உள்ள Cheam பகுதியில் 30 வயதுள்ள நபரின் மீது கத்திக்குத்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

அவர் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த சம்பவம் குறித்து தலைமை பொலிஸ் அதிகாரி Cressida Dick கூறுகையில், துப்பாக்கி சூட்டில் ஈடுபட்டதாக இரண்டு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் தற்போது காவல் நிலையத்திற்கு எடுத்து செல்லப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். மேலும், சம்பவம் நடைபெற்ற பகுதியில் சிசிடிவி காட்சிகளையும் பொலிஸார் ஆய்வு செய்து வருகின்றனர்.

கத்திக்குத்து தாக்குதலில் பாதிக்கப்பட்ட நபருக்கு லேசான காயங்கள் மட்டுமே ஏற்பட்டுள்ளது.

சமீப காலமாகவே இளைஞர்கள் மத்தியில் கத்திக்குத்து சம்பவங்கள் அதிகரித்துள்ளன. தற்போது நடைபெற்றுள்ள சம்பவம் மிகவும் மோசமான மட்டத்தில் உள்ளது என தெரிவித்துள்ளார்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்