அன்னையர் தினத்தை கொண்டாட ஹரி - மேகன் தம்பதி வெளியிட்ட சிலாகிக்க வைக்கும் புகைப்படம்!

Report Print Arbin Arbin in பிரித்தானியா

பிரித்தானிய இளவரசர் ஹரி மற்றும் அவரது மனைவி மேகன் மெர்க்கல் அண்மையில் பிறந்த தங்களின் குட்டி இளவரசர் ஆர்ச்சியின் சிலாகிக்க வைக்கும் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளனர்.

குறித்த புகைப்படத்தை வெளியிட்டு மேகன் மெர்க்கல் தமது மகனுடன் முதன் முறையாக அன்னையர் தினத்தை கொண்டாடியுள்ளார்.

இதன் ஒருபகுதியாக குட்டி இளவரசர் ஆர்ச்சியின் பாதங்களை மட்டுமே புகைப்படமாக பதிவிட்டுள்ளார் மேகன்.

மேலும் அந்த புகைப்படத்தில் மறைந்த இளவரசி டயானாவை நினைவுகூறும் வகையில் அவருக்கு மிகவும் பிடித்தமான பூக்களும் இடம்பெற்றிருந்தன.

வெறும் பாதங்கள் மட்டுமே கொண்ட அந்த புகைப்படமானது புதுவரவான குட்டி இளவரசர் ஆர்ச்சியுடையது என அரண்மனை வட்டாரங்களும் உறுதி செய்துள்ளன.

குறித்த புகைப்படம் வெளியான அரை மணி நேரத்தில் 5 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் விருப்பம் தெரிவித்து பதிவிட்டுள்ளனர்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers