இரட்டை குடியுரிமை வைத்திருப்போருக்கு ஒரு முக்கிய செய்தி!

Report Print Balamanuvelan in பிரித்தானியா

பிரித்தானிய மற்றும் ஈரானிய இரட்டை குடியுரிமை வைத்திருப்போருக்கு பிரித்தானிய வெளியுறவுச் செயலர் ஒரு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

பிரித்தானிய வெளியுறவு செயலரான Jeremy Hunt, பிரித்தானிய மற்றும் ஈரானிய இரட்டை குடியுரிமை வைத்திருப்போர் ஈரானுக்கு பயணம் செய்வதை தவிர்க்குமாறு எச்சரித்துள்ளார்.

அப்படி செல்வோர் ஈரான் அரசால் மிக மோசமான அளவில் நடத்தப்படும் பெரும் அபாயம் உள்ளதாக அவர் எச்சரித்துள்ளார்.

ஈரானிய பிரித்தானிய கவுன்சில் ஊழியர் ஒருவர், பிரித்தானியாவுக்காக உளவு பார்த்ததாக குற்றம் சாட்டப்பட்டு ஈரானில் அவருக்கு 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டிருப்பதையடுத்து Jeremy Hunt இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.

Aras Amiri (32) என்னும் அந்த பெண் தனது பாட்டியைக் காண்பதற்காக ஈரானுக்கு சென்றபோது, கடந்த ஆண்டு மார்ச் மாதம் கைது செய்யப்பட்டார்.

ஏற்கனவே, அமெரிக்கா, ஈரான் மீது தடைகளை விதித்ததையடுத்து, அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையிலான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ள நிலையில், Jeremy Huntஇன் இந்த எச்சரிக்கை வெளியாகியுள்ளது.

பிரித்தானியா பலமுறை பிரச்சினைகளை தீர்க்க வாய்ப்பளித்தும் ஈரானின் நடத்தை மோசமாகிக் கொண்டே வருவதாக தெரிவித்தார் அவர்.

சமரசத்திற்கான எல்லா வாய்ப்புகளும் பலனற்றுப்போன நிலையில், தற்போது அனைத்து பிரித்தானிய ஈரானிய இரட்டைக் குடியுரிமை கொண்டோரையும் ஈரானுக்கு போக வேண்டாம் என எச்சரிக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது என்றார் அவர்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்