சுற்றுலா சென்ற இடத்தில் ஹொட்டலில் தனியாக இருந்த பிரித்தானிய இளம்பெண்ணுக்கு நேர்ந்த சோகம்!

Report Print Balamanuvelan in பிரித்தானியா

குடும்பத்துடன் ஸ்பெயின் தீவு ஒன்றிற்கு சுற்றுலா சென்ற இளம்பெண் ஒருவர், ஹொட்டல் அறையில் தனியாக இருந்தபோது பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்டுள்ளார்.

ஸ்பெயின் தீவுகளில் ஒன்றான Majorcaவுக்கு சுற்றுலா சென்ற அந்த பிரித்தானிய குடும்பம் பிரபல ஹொட்டல் ஒன்றில் தங்கியிருக்கிறது.

மாலை 4 மணியளவில் மற்றவர்கள் வெளியில் சென்று விட, ஒரு 15 வயது இளம்பெண் மட்டும் அறையில் தனியாக இருந்திருக்கிறார்.

அப்போது அந்த அறைக்குள் வலுக்கட்டாயமாக நுழைந்த ஒருவர் அந்த பெண்ணை வன்புணர்வு செய்திருக்கிறார்.

பின்னர் அவர் அங்கிருந்து தப்பியோடிவிட, அந்த பெண் ஹொட்டல் ஊழியர்களை தொடர்பு கொண்டு உதவி கோரியிருக்கிறார்.

விரைந்து வந்த பொலிசார் அந்த பெண்ணை மருத்துவ பரிசோதனைகளுக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அந்த நபர் அந்த பெண்ணை குறி வைத்து காத்திருந்திருக்கலாம் என்றும், அவளது குடும்பத்தார் வெளியே செல்வதைக் கண்டு அறைக்குள் நுழைந்திருக்கலாம் என்றும் கருதுகின்றனர்.

குற்றச்செயலில் ஈடுபட்ட அந்த நபர் வெளிநாட்டைச் சேர்ந்தவர் என்று மட்டும் தெரிவித்துள்ள பொலிசார், அவரை தீவிரமாக தேடி வருகின்றனர்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்