அரச குடும்ப தம்பதிகளுக்கு இடையே நிலவும் கடும் போட்டி

Report Print Vijay Amburore in பிரித்தானியா

மக்களிடையே அதிகம் பிரபலமடைவதற்காக இரண்டு அரச குடும்ப தம்பதியினரும் புதிதாக ஒரு சமூகவலைத்தள நிபுணரை வேலைக்கு அமர்த்தியுள்ளனர்.

இளவரசர் வில்லியம் மற்றும் கேட் ஆகியோரிடம் இருந்து பிரிந்த பின்னர் சொந்தமாக ஒரு வீட்டில் வசித்து வரும் ஹரி - மேகன் தம்பதி, சமூக வலைதளத்தில் பிரபலமடைவதற்கான வேலைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

வில்லியம் - கேட் தம்பதியினரை 9.2 மில்லியன் பயனாளர்கள் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பின் தொடர்ந்து வருகின்றனர்.

ஆனால் இளவரசர் ஹரி - மேகன் தம்பதியினரை 8.5 மில்லியன் பயனாளர்கள் மட்டுமே பின் தொடர்கின்றனர். சரியான நேரத்தில் பதிவுகளை வெளியிடாமல் இருப்பதே 700,000 பயனாளர்கள் குறைவாக இருக்க காரணம் என கூறப்படுகிறது.

இந்த நிலையில் வில்லியம் - கேட் தம்பதியினரை விட சமூகவலைத்தளத்தில் இன்னும் அதிகம் பிரபலமடைய ஹரி - மேகன் தம்பதி புதிதாக ஒரு சமூகவலைத்தள நிபுணரை வேலைக்கு அமர்த்தியிருப்பதாக செய்தி வெளியாகியுள்ளது.

முன்னதாக யாரும் எதிர்பாராத ஒரு நடவடிக்கையாக ஹரி - மேகன் தம்பதி, இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வில்லியம் - கேட் ஆகியோரை பின்தொடர்வதை நிறுத்திக்கொண்டது குறிப்பிடத்தக்கது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்