இளவரசி டயானாவின் மறுபிறவி..! ராணி வாழ்க்கையில் நடந்த மர்மங்களை புட்டு புட்டு வைக்கும் 4 வயது குழந்தை

Report Print Basu in பிரித்தானியா

அவுஸ்திரேலியாவை சேர்ந்த நான்கு வயது சிறுவன் தான் இளவரசி டயானாவின் மறுபிறவி என்று கூறியுள்ளார். மேலும் அவரது வாழ்க்கையைப் பற்றிய துல்லியமான விவரங்களை நினைவு கூர்ந்துள்ளார்.

அவுஸ்திரேலிய தொலைக்காட்சி தொகுப்பாளர் டேவிட் காம்ப்பெல், கடந்த இரண்டு ஆண்டுகளாக தனது மகன் பில்லி, தான் இளவரசி டயானாவின் மறுபிறப்பு என்று நினைப்பதை வெளிப்படுத்தியுள்ளார். தன் மகன் குறித்த கதையை பத்திரிகை கட்டுரை ஒன்றில் விவரித்துள்ளார் டேவிட் காம்ப்பெல்.

அதில், எனது மகன் பில்லி டயானாவைப் பற்றி இரண்டு வயதில் பேசத் தொடங்கிவிட்டான், டயானாவின் ஒரு படத்தை காட்டி, இதோ நான் இளவரசியாக இருந்தபோது, அது நான்தான் என கூறினான்.

டயானாவின் ராயல் குடும்பத்தை பற்றி அவனுக்கு ஏதும் கற்பிக்கப்படவில்லை என்றாலும், டயானாவின் நெருங்கிய குடும்பத்தைப் பற்றிய, பில்லியின் விசித்திரமான கருத்துக்கள் இன்னும் மோசமான திருப்பத்தை எற்படுத்தின. ஜான் என்ற ஒரு சகோதரரைப் பற்றி கூறினான், டயானாவின் சகோதரர் ஜான், இளவரசி பிறப்பதற்கு முன்பே இறந்துவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், அவரது இரண்டு குழந்தை இளவரசர்கள் வில்லியம் மற்றும் ஹாரியையும் நினைவு கூர்ந்தான்.

ராணியின் கிறிஸ்துமஸ் இல்லமான பால்மோரல், எப்படி இருந்தது என்பதை பில்லி துல்லியமாக விவரிப்பான். அதை பற்றி அவன் கேள்விபட்டது கூட கிடையாது.

எங்களுடைய ஒரு ஸ்காட்டிஷ் நண்பரிடம், அவன் இளவரசி டயானாவாக இருந்தபோது, கில்டட் வொண்டர்லேண்டில் ஒரு கோட்டைக்குச் சென்றதாக கூறினார். கோட்டைக்குள் யூனிகார்ன் இருப்பதாக பில்லி விவரித்தார்.

யூனிகார்ன் ஸ்காட்லாந்தின் தேசிய விலங்கு மற்றும் கோட்டையின் சுவர்களில் யூனிகார்ன்கள் உள்ளன, இது பில்லிக்கு எப்படி தெரியும் என புரியவில்லை.1997 ஆம் ஆண்டில் பாரிஸில் டயானாவின் கார் விபத்து மரணத்தையும், பில்லி நினைவுகூர்ந்ததாகத் காம்ப்பெல் தெரிவித்துள்ளார்.

பத்திரிகையில் தனது கட்டுரையை முடித்துக்கொண்டு டேவிட், பில்லி வளர்ந்த பின்னர் இதை ஒருபோதும் நினைவில் கொள்ள மாட்டாரா? அவர் உண்மையில் இளவரசியின் மறுபிறவி சாரமாக இருக்க முடியுமா? என கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்