100 வயது பிரித்தானியர் செய்த ஆச்சரிய செயல்!

Report Print Kabilan in பிரித்தானியா

பிரித்தானியாவைச் சேர்ந்த 100 வயதைக் கடந்த முதியவர் ஒருவர், 14 ஆயிரம் அடி உயரத்தில் இருந்து குதித்து சாகசம் செய்து அசத்தியுள்ளார்.

கடந்த 2ஆம் உலகப் போரில் பங்கு பெற்றவர் பிரித்தானியாவைச் சேர்ந்த தாமஸ் ஹாட்சன். 1919ஆம் ஆண்டு ஜூன் 30ஆம் திகதி இவர் பிறந்தார். தற்போது நல்ல ஆரோக்கியத்துடன் இருக்கும் இவருக்கு விநோத ஆசை ஒன்று இருந்துள்ளது.

அதாவது, விமானத்தில் இருந்து பாராசூட் உதவியுடன் குதிக்க வேண்டும் என்பதே இவரது ஆசையாகும். இவரது ஆவலை அறிந்த தனியார் அமைப்பு ஒன்று, அதற்கான ஏற்பாடுகளை செய்தது.

அதன்படி கடந்த 7ஆம் திகதி அவர் விமானத்தில் பயணித்தார். வீரர் ஒருவரின் உதவியுடன் பாராசூட் கட்டிக்கொண்டு, சுமார் 14 ஆயிரம் அடி உயரத்தில் இருந்து தாமஸ் குத்தித்தார்.

இதன்மூலம் தனது நீண்ட நாள் ஆசையை நிறைவேற்றிக் கொண்ட அவர், பத்திரமாக தரையிறங்கினார்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்