திருமணமான 1 மாதத்தில் புதுமாப்பிள்ளையை தேடி மீண்டும் வந்த எமன்.. அதிர்ந்து போன மனைவி

Report Print Raju Raju in பிரித்தானியா

பிரித்தானியாவில் திருமணமான ஒரு மாதத்தில் புதுமாப்பிள்ளை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஜேசன் வால்கர் என்பவர் தீயணைப்பு துறையில் வேலை செய்து வந்தார்.

ஜேசனும், கிலி என்ற பெண்ணும் 30 வருடங்களாக நண்பர்களாக இருந்தனர். இந்நிலையில் கடந்தாண்டு ஜூலை மாதம் ஜேசனுக்கு வயிறு வலி ஏற்பட்டது.

இதையடுத்து மருத்துவமனைக்கு சென்ற போது அவருக்கு குடல் புற்றுநோய் இருப்பது தெரியவந்தது.

ஆனால் நோயை கண்டு அஞ்சாத ஜேசன் அதற்கான சிகிச்சையை தீவிரமாக எடுத்து கொண்டார்.

இந்நிலையில் கடந்த மார்ச் மாதம் ஜேசனுக்கு புற்றுநோய் முழுவதுமாக குணமாகிவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இதையடுத்து ஜேசனும், கிலியும் மிகுந்த மகிழ்ச்சியடைந்தனர். இந்நிலையில் ஏப்ரல் 26ஆம் திகதி ஜேசனுக்கு மீண்டும் உடல்நலக்குறைவு ஏற்பட்டது.

அவருக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்ட போது மீண்டும் புற்றுநோய் ஏற்பட்டது தெரியவந்தது.

இதையடுத்து ஜேசனும், கிலியும் அதிர்ச்சியில் உறைந்து போனார்கள். இதோடு நோயை குணப்படுத்த முடியாது என்றும் மருத்துவர்கள் கூறிவிட்டனர்.

இந்நிலையில் நண்பர்களாக இத்தனை ஆண்டுகாலம் இருந்த ஜேசனும், கிலியும் கடந்த ஜூன் மாதம் திருமணம் செய்து கொண்டனர்.

ஆனால் திருமணமான ஒரே மாதத்தில் ஜேசன் கடந்த 7ஆம் திகதி உயிரிழந்தார்.

இது கிலியை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது, அவர் கூறுகையில், ஜேசனின் மறைவு என்னை போல அவரை தெரிந்த பலருக்கும் பேரிழப்பு தான்.

கடுமையான உழைப்பாளியான அவர் தீயணைப்பு துறை பணியில் சிறந்து விளங்கினார்.

அவரின் இழப்பு ஈடுசெய்ய முடியாதது என கூறியுள்ளார். இதே போல ஜேசன் பணியாற்றிய தீயணைப்பு துறையின் சார்பிலும் அவருக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்