மனைவியை கௌரவ கொலை செய்த நபர் பிரித்தானியாவுக்குள் நுழைய திட்டம்: பிரித்தானிய அரசியல்வாதி எச்சரிக்கை!

Report Print Balamanuvelan in பிரித்தானியா

தன்னை விவாகரத்து செய்துவிட்டு வேறொருவரை மணந்த பெண்ணை கௌரவ கொலை செய்த அவரது முன்னாள் கணவன், தனது புது பிரித்தானிய மனைவியுடன் பிரித்தானியாவுக்குள் நுழைய இருப்பதாக, பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் பாகிஸ்தான் பிரதமரை எச்சரித்துள்ளார்.

Manninghamஐச் சேர்ந்த Samia Shahid (28)க்கும் பாகிஸ்தானைச் சேர்ந்த அவரது உறவினரான Shakeelக்கும் குடும்பத்தினர் சேர்ந்து திருமணம் செய்து வைத்துள்ளனர்.

ஆனால் Shakeelஐ விவாகரத்து செய்த Samia, Leedsஐச் சேர்ந்த Syed Mukhtar Kazim என்பவரை திருமணம் செய்து கொள்ள, இருவருமாக துபாய் சென்று வாழ முடிவு செய்துள்ளனர்.

இது அவரது குடும்பத்தினருக்கும் முன்னாள் கணவனுக்கும் கடும் ஆத்திரத்தை ஏற்படுத்தியுள்ளது.

நான்கு ஆண்டுகளுக்குபி பின், Samiaவின் தந்தை உயிருக்குப்போராடிக் கொண்டிருப்பதாக பாகிஸ்தானிலிருந்து செய்தி வர, அது சதி வேலையாக இருக்கலாம் என அவரது இந்நாள் கணவன் எச்சரித்தும், பாகிஸ்தான் புறப்பட்டுச் சென்றுள்ளார் அவர்.

பாகிஸ்தான் சென்ற Samiaவை வீட்டில் அடைத்து வைத்து கண்காணிக்குமாறு அவரது முதல் கணவன் Shakeel கட்டளையிட்டிருக்கிறார்.

அதன்படி Samiaவின் பெற்றோர் அவரை கண்காணிப்பிலேயே வைத்திருக்க, தான் துபாய் திரும்பும் நாள் நெருங்கவே அவரது பாஸ்போர்ட்டையும் விமான டிக்கெட்டையும் எங்கு வைத்திருக்கிறார் என கேட்டு அவரது முன்னாள் கணவன் மிரட்ட, பதிலளிக்க மறுத்திருக்கிறார் Samia.

ஆத்திரத்தில் வலுக்கட்டாயமாக Samiaவை படுக்கையறைக்கு தூக்கிச் சென்ற Shakeel, அவரை முரட்டுத்தனமாக வன்புணர்ந்திருக்கிறார்.

பின்னர் அவர் பிரித்தானிய உயர் ஸ்தானிகராலயத்திற்கு செல்ல முயல, Samiaவின் தந்தை Mohammed Shahid, அவரது முன்னாள் கணவனான Shakeelக்கு சமிக்ஞை கொடுக்க, அவர் அவரது ஸ்கார்பைக் கொண்டே அவரது கழுத்தை நெறிக்க, அவருக்கு உதவியாக Samiaவின் கால்களை அழுத்திப் பிடித்துக் கொண்டிருந்திருக்கிறார் அவரது தந்தை. உடனடியாக, Samia உடல்நலமின்றி இறந்து போனதாகக் கூறி, அவரது உடலை கிராமத்திலுள்ள கல்லறை ஒன்றில் புதைத்திருக்கிறார்கள்.

துபாயிலிருக்கும் Samiaவின் இந்நாள் கணவனான Mukhtarக்கு தகவல் கிடைக்கவே, அவர் Samiaவின் குடும்பத்தார், அவர் இரண்டாவது திருமணத்தை ஏற்றுக் கொள்ளாததால் அவரை கொலை செய்து விட்டதாக புகாரளித்திருக்கிறார்.

Samiaவின் தந்தையும் முன்னாள் கணவனும் கைது செய்யப்பட்டாலும், ஆதாரங்கள் இல்லை என கூறி இருவரும் ஜாமீனில் விடப்பட்டுள்ளனர்.

பின்னர் Samiaவின் தந்தை இறந்து போக, அவரது முதல் கணவன் வேறொரு பிரித்தானிய பெண்ணை மணந்துகொண்டு பிரித்தானியாவுக்கு வர முயற்சிகள் மேற்கொண்டுள்ளார்.

இந்நிலையில் பிரித்தானியாவில், Samiaவின் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினரான Naz Shah, பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

அதில் Samiaவை வன்புணர்ந்து கொலை செய்த அவரது முன்னாள் கணவன், தற்போது பிரித்தானியாவுக்கு வர இருப்பதாக கடிதம் எழுதியுள்ளார்.

அந்த கடிதத்தின் நகல்களை அவர் உள்துறைச் செயலர் ப்ரீத்தி பட்டேலுக்கும், வெளியுறவுச் செயலர் டொமினிக் ராபுக்கும் அனுப்பி அவர் பிரித்தானியாவுக்குள் நுழைவதை தடுக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளதோடு, இது தொடர்பாக பாகிஸ்தானிலிருக்கும் தங்கள் சகாக்களுக்கு தகவல் தெரிவித்து ஆவன செய்யுமாறும் கேட்டுக்கொண்டுள்ளார்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்