நானும் ஒரு சாதாரண குழந்தைதான்: நிரூபித்த குட்டி இளவரசி சார்லட்!

Report Print Balamanuvelan in பிரித்தானியா

பிரித்தானிய இளவரசர் வில்லியமும் அவரது மனைவி கேட்டும் படகுப் போட்டி ஒன்றில் கலந்து கொள்ள சென்றிருந்த இடத்தில், கூடியிருந்த மக்களைப் பார்த்து கையசைக்குமாறு கேட் மகள் சார்லட்டிடம் கூற, அதற்கு அவள் செய்த குறும்புத்தனமான செயல் மக்களை விழுந்து விழுந்து சிரிக்க வைத்தது.

இன்று நடைபெற்ற படகு போட்டி ஒன்றில், பிரபல தொலைக்காட்சி சாகஸ பிரபலம் பியர் கிரில்ஸ் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

அந்த நிகழ்ச்சியின்போது கூடியிருந்த மக்களைப் பார்த்து கையசைக்குமாறு கேட் மகளிடம் கூற, சார்லட்டோ கையசைப்பதற்கு பதிலாக, தனது நாக்கைத் துருத்திக் காட்ட, மக்கள் விழுந்து விழுந்து சிரித்தனர்.

ஒரு பக்கம் தானும் ஒரு குழந்தைதான், தனக்கும் ஒரு சாதாரண குழந்தைக்கான உணர்ச்சிகள் உண்டு என்பது போல் தோன்றச் செய்த சார்லட்டின் செயலைக் கண்ட சிலர் சிரித்தாலும், பலரும் அவள் நடந்து கொண்ட விதம் தவறு என்றும் கருத்து தெரிவித்துள்ளனர்.

அதே நேரத்தில், அவள் ஒரு 4 வயது குழந்தை, குழந்தை குழந்தையாக இருக்கட்டும் என்றும் ஒருவர் கருத்துத் தெரிவித்திருந்தார்.

இது ஒரு பக்கம் இருக்க, படகு போட்டியைப் பொருத்தவரையில், பியர் கிரில்ஸை யாரும் ஜெயிக்க முடியவில்லை.

அவர் முதலிடத்தைப் பெற, இளவரசர் வில்லியமுக்கு மூன்றாவது இடம்தான் கிடைத்தது.

அதாவது பரவாயில்லை, இளவரசி கேட் கடைசி இடத்தைத்தான் பிடித்தார், அதற்காக அவருக்கு ஒரு மர ஸ்பூனை பரிசாக கொடுக்க, அதையும் ஜாலியாக எடுத்துக் கொண்டார் கேட்.

அதற்காக, அவரது 4 வயது குழந்தையும் இப்போதே அவரைப்போல இருக்க வேண்டும் என எதிர்பார்க்க முடியுமா என்ன!

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்