5 மில்லியன் பவுண்ட் மதிப்பிலான தங்க கழிப்பறை திருடு போன வழக்கில் 3 பேர் கைது

Report Print Vijay Amburore in பிரித்தானியா
289Shares

பிரித்தானியாவில் ப்ளென்ஹெய்ம் மாளிகையில் இருந்து தங்க கழிப்பறை திருடப்பட்ட வழக்கில் மூன்று பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இத்தாலிய கலைஞர் மௌரிஸோ கட்டெலனால் வடிவமைக்கப்பட்ட 4.8 மில்லியன் பவுண்ட் மதிப்புடைய தங்க கழிவறை கடந்த செப்டெம்பர் 12ம் திகதியன்று ஆக்ஸ்போர்டுஷையரில் உட்ஸ்டாக்கில் உள்ள வின்ஸ்டன் சர்ச்சிலின் பிறப்பிடத்தில் பார்வைக்காக வைக்கப்பட்டிருந்தது.

அந்த கழிப்பறைக்குக்கு அமெரிக்க என்று பெயர் வைக்கப்பட்டிருந்தது. ப்ளென்ஹெய்ம் மாளிகையில் வைக்கப்பட்டிருந்த தங்க கழிப்பறை செப்டம்பர் 14 அன்று, திருட்டு போனது.

இந்த சம்பவம் தொடர்பாக தீவிர விசாரணை மேற்கொண்டு வந்த பொலிஸார், ஆக்ஸ்போர்டைச் சேர்ந்த 35, 34 வயதுடைய இரண்டு ஆண்கள் மற்றும் 36 வயதுள்ள ஒரு பெண்ணை கைது செய்திருப்பதாக புதன்கிழமையன்று செய்தி வெளியிட்டனர்.

இதற்கு முன்னதாக சந்தேகத்தின் பேரில் ஈவ்ஷாம் நகரைச் சேர்ந்த 66 வயது நபரும், செல்டென்ஹாம் பகுதியைச் சேர்ந்த 35 வயது நபர் ஒருவர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்