இளவரசர் ஹரியை மணந்த பிறகு ரொம்ப கஷ்டப்படுகிறேன்... கண்ணீர் ததும்ப ஒப்புக் கொண்ட மேகன்

Report Print Basu in பிரித்தானியா

இளவரசர் ஹரியின் மனைவி மேகன் மார்க்கல், திருமணத்திற்கு பிறகு தான் பல சவால்களை எதிர்கொண்டு வருவதாக வெளிப்படையாக தெரிவித்துள்ளார்.

ஐடிவி-யின் ஹாரி-மேகன் ஆவணப்படத்திற்காக நேர்காணலில் கலந்துக்கொண்ட அவர், ஆப்பிரிக்க பயணம் குறித்த புதிய பேட்டியில் பேசியபோது உணர்ச்சிவசப்பட்டார்.

ஐடிவியின் டாம் பிராட்பி உடனான நேர்காணலின் போது, கவனத்தை ஈர்க்கும் வாழ்க்கையில் உள்ள உண்மையான அழுத்தங்கள் மற்றும் இருவருக்கும் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து மேகனிடம் கேள்வி கேட்கப்பட்டது.

இதற்கு பதிலளித்த மேகன், எந்தவொரு பெண்ணும் குறிப்பாக அவர்கள் கர்ப்பமாக இருக்கும் போது மிகவும் பாதிக்கப்படக்கூடியவர், அதனால் அது மிகவும் சவாலானது, பின்னர் குழந்தை பிறந்ததும் சவால்கள் அதிகமானது.

குறிப்பாக ஒரு பெண்ணாக, பல பிரச்னை இருக்கிறது. எனவே ஒரு புதிய அம்மாவாக அல்லது புதுமணத் தம்பதியராக இருக்க முயற்சி செய்ய வேண்டியது உட்பட பல சவால்கள் இருக்கிறது.

பின்னர், இப்போது எப்படி இருக்கிறீர்கள் என்று கேள்வி கேட்டதற்கு நன்றி தெரிவித்த மேகன்,ஏனென்றால் நான் நன்றாக இருக்கிறேனா என்று பலர் கேட்கவில்லை. ஆனால் திரைக்குப் பின்னால் செல்வது மிகவும் உண்மையான விஷயம்.

அவரது பதிலைப் பின்தொடர்ந்த, டாம், பதில், உண்மையில் சரியாக இல்லை, சொல்வது உண்மையிலேயே ஒரு போராட்டமாக இருந்ததா? என கேட்டார்.

கண்ணீருடன் ததும்பிய மேகன், வெறுமனே பதிலளிப்பதற்கு முன் இடைநிறுத்தி ‘ஆம்’ என கூறினார். மேலும், கடந்த ஒரு வருடம் மிகவும் சவாலாக இருந்ததாக குறிப்பிட்டார். ஏனெனில் அவர் நலமாக இல்லை என்றும் கஷ்டப்படக்கூடிய தாய் என்றும் ஒப்புக் கொண்டார்

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்