பாகிஸ்தானுக்கு புறப்பட்ட இந்திய வம்சாவளியினர்: சுற்றி வளைத்த தீவிரவாத தடுப்பு பொலிசார் அவமதிப்பு!

Report Print Balamanuvelan in பிரித்தானியா

பாகிஸ்தானில் குருநானக்கின் பிறந்த நாள் விழாவில் கலந்து கொள்வதற்காக விமானம் ஏற முயன்ற இந்திய வம்சாவளியினர் ஒருவரை சுற்றி வளைத்த தீவிரவாத தடுப்பு பொலிசார், அவரை அவமதித்துள்ளனர்.

இந்திய வம்சாவளியினரான 38 வயதுடைய பிரித்தானிய சீக்கியர் ஒருவர் பாகிஸ்தான் செல்வதற்காக ஹீத்ரோ விமான நிலையத்திற்கு சென்றுள்ளார்.

அவரைக் கண்டதும் ஒன்பது தீவிரவாத தடுப்பு பொலிசார் அவரை சுற்றி வளைத்து ஒரு அறைக்குள் கொண்டு சென்றுள்ளனர்.

இங்கிலாந்திலுள்ள Coventry என்ற நகரில் வசிக்கும் அந்த சீக்கியர், எதற்காக என்னை தடுக்கிறீர்கள் என பொலிசாரிடம் கேட்க, கோபத்தில் தங்கள் லத்திகளை எடுத்திருக்கிறார்கள் அவர்கள்.

மக்கள் கூட்டம் முன்பு அவர்கள் தன்னை இவ்வாறு அவமதிக்க, பலர் தன்னைப் பார்த்து ஏளனமாக சிரித்ததாகவும், சிலர் வீடியோ எடுக்கத் துவங்கியதாகவும் கூறியுள்ளார் அவர்.

அவரது மொபைல் போன், பாஸ்போர்ட் ஆகியவற்றை பிடுங்கி வைத்துக் கொண்ட அவர்கள், அவரது உடைமைகளை சோதனையிட்டுள்ளனர்.

அதில் ஒரு தேநீர் கெட்டில், கப் நூடுல்ஸ் ஆகியவை இருந்ததைக் கண்டதும், எந்த தீவிரவாத முகாமுக்கு சென்று பயிற்சி எடுக்கப்போகிறாய் என்றும், இந்தியாவைத் தாக்க திட்டமிட்டிருக்கிறாயா என்றும் கேட்டுள்ளனர் பொலிசார்.

அவரது மாத்திரைகள், உணவு, தண்ணீர் என எதையும் அவர்கள் அவருக்கு கொடுக்க மறுத்துவிட்டதாக்வும் கூறப்படுகிறது.

பொலிசார் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில், Coventryயைச் சேர்ந்த 38 வயது நபர் ஒருவர் பாகிஸ்தானுக்கு விமானம் ஏற முயன்றபோது, ஹீத்ரோ விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தப்பட்டார்.

தீவிரவாத சட்டத்தின் கீழ், அவர் தீவிரவாத செயல்களில் தொடர்புடையவரா என்பதை அறிவதற்காக அவர் சோதனையிடப்படுவதாகவும், அவர் கைது செய்யப்படவில்லை என்றும் விசாரிக்கப்படுகிறார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்