60 வயது முதியவரை திருமணம் செய்து கொண்டது ஏன்? 19 வயது இளம் பெண்ணின் காரணம்: கேட்ட வார்த்தைகள்

Report Print Santhan in பிரித்தானியா

பிரித்தானியாவில் 60 வயதிற்கு மேலிருக்கு நபரை 22 வயது இளம் பெண் திருமணம் செய்து கொண்டதால், அவர் கேட்ட வார்த்தைகள், தற்போது நான் எப்படி இருக்கிறேன் என்பதை பற்றி கூறியுள்ளார்.

பிரித்தானியாவின் Northamptonshire-ல் இருக்கும் Ecton Brook பகுதியை சேர்ந்த தம்பதி Leslie Rickwood(63)-Lizzie Rickwood(22).

இவர்கள் இருவருக்கும் இடையே 40 வயதிற்கு மேல் வித்தியாசம் இருப்பதால், Leslie Rickwood-ஐ அங்கிருக்கும் மக்கள் Paedophile (அதாவது குழந்தைகள் மீது பாலியல் ரீதியாக ஆசைபடுபவர்) என்று கூறி வருகின்றனர்.

இதை அவர்கள் தங்கியிருக்கும் வீட்டில் அடையாளம் தெரியாத மர்ம நபர் Paedophile மற்றும் nonce என்ற வார்த்தையை ஸ்பிரே பெயிண்ட் மூலம் அடித்து எழுதி சென்றுள்ளார்.

இது குறித்து குறித்து காவல்நிலையத்தில் புகார் கொடுத்தும் எந்த பலன் இல்லை என்று Leslie Rickwood-ஐ காதலித்து திருமணம் செய்து கொண்ட 22 வயது இளம் பெண் Lizzie Rickwood கூறுகையில், என் கணவரை பலரும் அது போன்ற வார்த்தைகளை கூறுகின்றனர்.

நாங்கள் இருவரும் 2016-ஆம் ஆண்டு என் சந்தித்து கொண்டோம். என்னுடைய நண்பர் மூலம் அவர் அறிமுகமானார். முதல் சந்திப்பிலே இருவருக்கும் பிடித்து போய்விட்டது. அப்போது எனக்கு 19 வயது.

அவர் மிகவும் வயதானவர், உடல்நிலை சரியில்லாதவர் என்றெல்லாம் கூறுகின்றனர். ஆனால் அவர் எப்படி ஒரு அருமையான கணவன் என்பது எத்தனை பேருக்கு தெரியும்.

நாங்கள் இருவரும் பொது நிகழ்ச்சி ஒன்றில் சந்தித்து கொண்டாலும், அதன் பின் தனியாக சந்திக்க துவங்கினோம், இதைத் தொடர்ந்து அடுத்து எல்லாம் வேகமாக நடந்தன.

ஒரு முறை நாங்கள் பேசிக் கொண்டிருந்த போது அவரின் வயதைக் கேட்டேன், நான் அவருக்கு 40 வயதிருக்கும் என்று நினைத்தேன், ஆனால் 60 வயது என்றவுடன் முதலில் அதிர்ச்சியடைந்தேன். அவருக்கு 60 எனக்கு 19 அதெல்லாம் அப்போது கண்ணுக்கு தெரியவில்லை.

அவருக்கு திருமணமாகி 7 பிள்ளைகள் இருக்கின்றனர், மனைவியை விவகாரத்து செய்திருக்கிறார். இதைப் பற்றி எல்லாம் பேசிக் கொண்டிருக்கும் போது திடீரென்று முத்தம் கொடுத்தார். அப்போது எனக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை.

அதன் பின் இதைப் பற்றி எப்படி என் குடும்பத்தினரிடம் சொல்வது என்று தவித்தேன், முதலில் என் குடும்பத்தினர் இதற்கு ஒத்து கொள்ளவில்லை, அதன் பின் அவரிடம் பழகிய பின்னர் திருமணத்திற்கு சம்மதித்தனர்.

ஆனால் அவர் குடும்பத்தினர் மற்றும் பிள்ளைகள் யாரும் சம்மதிக்கவில்லை, நான் என் தெருவில் நடந்து சென்றாள், நீ ஒரு அசுத்தமானவள் என்று கூறுவர், இதைக் கேட்டு நான் அல முறை அழுதிருக்கிறேன். பலரும் என்னை வார்த்தையால் அழ வைத்தனர்.

ஒரு ஷாப்பிங் சென்றால், கூட அங்கு பார்ப்பவர் உன்னை பார்த்தால் வெறுப்பாக இருக்கிறது என்று கூறுகின்றனர். இதை பற்றி எல்லாம் எனக்கு கவலையில்லை, ஒரே கவலை அவரை குடும்பத்தினர் ஏற்று கொள்ளாதது தான், மற்ற படி நாங்கள் இருவரும் மகிழ்ச்சியாக இருக்கிறோம்.

யார் எப்படி நினைத்தால் எனக்கென்னா, நான் ஒரு அதிர்ஷ்டசாலி பெண், இவர் எனக்கு கிடைத்ததால் என்று கூறி முடித்தார்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்