பிரித்தானிய பொதுத்தேர்தல் 2019: கன்சர்வேட்டிவ் கட்சியினர் பெரும்பான்மையுடன் வெல்ல வாய்ப்பு!

Report Print Balamanuvelan in பிரித்தானியா

சமீபத்திய ஆய்வு ஒன்று போரிஸ் ஜான்சனின் கன்சர்வேட்டிவ் கட்சியினர் 68 இருக்கை பெரும்பான்மையுடன் வெல்வார்கள் என்றும், பிரெக்சிட்டை நிறைவேற்றுவார்கள் என்றும் தெரிவித்துள்ளது.

கன்சர்வேட்டிவ் கட்சியினர் 359 இருக்கைகளை வெல்வார்கள், அது ஜனவரிக்கு முன் போரிஸ் ஜான்சன் தனது பிரெக்சிட் ஒப்பந்தத்தையும் நிறைவேற்ற உதவும் என்றும் அந்த ஆய்வு தெரிவித்துள்ளது.

போரிஸ் ஜான்சனின் கட்சி தனது தேர்தல் அறிக்கையை வெளியிட்டபின், ஒரு புள்ளி கீழே இறங்கியுள்ள நிலையில், ஜெரமி கார்பினின் எதிர்க்கட்சி இரண்டு சதவிகிதம் மேலே சென்றுள்ளது.

இம்மாத துவக்கத்தில் நடத்தப்பட்ட இதேபோன்ற ஒரு ஆய்வில் கன்சர்வேட்டிவ் கட்சியினர் 96 இருக்கைகளுடன் பெரும்பான்மை பெறுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்