லண்டனில் வேறுநாட்டை சேர்ந்தவர் மீது இனவெறி தாக்குதல்! வழிந்த இரத்தம்.. சிசிடிவி புகைப்படங்கள் வெளியானது

Report Print Raju Raju in பிரித்தானியா
268Shares

லண்டனில் யூத மதகுருவை அடித்து இரத்த காயம் ஏற்படுத்தி, இனவெறியை தூண்டும் வகையில் பேசிய இரண்டு பேரின் சிசிடிவி புகைப்படங்களை பொலிசார் வெளியிட்டுள்ளனர்.

வடக்கு லண்டனில் உள்ள Stamford Hill பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை இரவு இஸ்ரேலை சேர்ந்த 54 வயதான யூதகுரு நடந்து சென்று கொண்டிருந்தார்.

திருமண நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ளவே அவர் பிரித்தானியா வந்திருந்தார்.

அப்போது அவரை பின் தொடர்ந்து வந்த இரண்டு நபர்கள் யூதர்களை கொலை செய்யுங்கள், அழுக்கான யூதர் இவர் போன்ற இனவெறியை தூண்டும் வார்த்தைகளால் திட்டினர்.

பின்னர் அவரை இருவரும் சேர்ந்து கீழே தள்ளிவிட்டனர். இதில் காயமடைந்த அவர் உடலில் இருந்து இரத்தம் வடிந்ததோடு, மிகுந்த அதிர்ச்சியடைந்தார்.

இதன்பின்னர் இருவரும் அங்கிருந்து தப்பியுள்ளனர். இந்த சம்பவம் அங்குள்ள யூதர்கள் சமுதாயத்தினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

கடந்த 2 வாரங்களாகவே யூதர்கள் மீதான வெறுப்பு தாக்குதல் அதிகமாக உள்ளதாக அவர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

பின்னர் சம்பவ இடத்துக்கு வந்த அதிகாரிகள் விசாரணை நடத்திய நிலையில் எந்தவொரு ஆதாரங்களையும் கண்டுபிடிக்க முடியவில்லை.

இதனிடையில் பாதிக்கப்பட்ட மதகுரு சிகிச்சைக்கு பின்னர் நாட்டை விட்டு வெளியேறிவிட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் சம்பவம் நடந்த பகுதியின் அருகில் இருந்த சிசிடிவி கமெராவில் இந்த குற்றத்தில் தொடர்புடைய இருவர் நடந்து செல்லும் புகைப்படங்கள் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

இந்த சம்பவத்துக்கு பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜான்சன், தொழிலாளர் கட்சி தலைவர் ஜெரிமி கோர்பின் உள்ளிட்ட தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து துப்பறியும் கண்காணிப்பாளர் ஆடம் காபூஸ் கூறுகையில், இது போன்ற வெறுக்கத்தக்க குற்றங்கள் லண்டனில் உள்ள பல தரப்பு மக்களை பாதிக்கிறது.

இது போன்ற இனவெறி பாகுபாட்டை எந்த சூழலிலும் ஏற்று கொள்ள முடியாது.

சம்பவம் தொடர்பில் விசாரித்து வரும் நிலையில் அந்த இரண்டு ஆண்கள் குறித்த தகவலை அறிய பொதுமக்களின் உதவியையும் நாடியுள்ளோம் என கூறியுள்ளார்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்