இளவரசர் ஹாரி அரச குடும்பத்தை விட்டு விலக முடிவு எடுத்தது ஏன்? அவரின் நண்பர் சொன்ன ரகசியம்

Report Print Santhan in பிரித்தானியா
2221Shares

பிரித்தானியா இளவரசர் ஹரி மற்றும் அவரது மனைவி மேகன் அரச குடும்பத்தின் மூத்த உறுப்பினர் பொறுப்பில் இருந்து விலகவுள்ளதாக அறிவித்த நிலையில், இதற்கு என்ன காரணம் இருக்கும் என்பதை ஹரியின் நண்பர் கூறியுள்ளார்.

பிரித்தானிய அரச குடும்பத்தின் மூத்த உறுப்பினர் பொறுப்பில் இளவரசர் ஹரி-மேகன் ஆகியோர் இருக்கின்றனர்.

ஆனால் அவர்கள் சமீபத்தில் வெளியிட்டிருந்த அறிவிப்பில், நாங்கள் அரச குடும்பத்தின் மூத்த உறுப்பினர் பொறுப்பிலிருந்து விலகவுள்ளோம்.

சுதந்திரமாக வேலை செய்ய நினைக்கிறோம். அதேநேரம் இங்கிலாந்து அரசுக்கும், ராணிக்கும் தேவையான எங்களது உதவிகள் தொடரும்.

கடந்த சில ஆண்டுகளாகவே இந்த விஷயத்தை செய்ய நாங்கள் தயாராக இருந்தோம். ஆனால், தற்போது நாங்கள் முடிவெடுத்துவிட்டோம் என்று தெரிவித்தனர். இந்த அறிவிப்பை தெரிவித்தவுடன், மேகன் மகன் ஆர்ச்சியுடன் கனடா சென்றுவிட்டார்.

அதோடு இவர்களின், இந்த அறிவிப்பு பிரித்தானிய மக்களுக்கு மட்டுமின்றி உலகம் முழுவதிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனால் ஹரியின் இந்த முடிவு குறித்து அவரிடம் பேச்சுவார்த்தை நடத்துவதற்கான வேலைகள் நடைபெற்று வருவதாகவும், இது குறித்து இருவரும் ராணியிடம் கூட விவாதிக்கவில்லை என்று கூறப்பட்டது.

இதனால் ராணி இது குறித்து விசாரணை நடத்த முடிவு செய்துளளாராம், அதன் படி கனடாவில் இருக்கும் மேகன் வீடியோ கான்பிரஸ் மூலம் இதில் பங்கேற்கவுள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், ஹரி-மேகன் அரச குடும்பத்தை விட்டு விலக என்ன காரணம் இருக்கும் என்பதை இந்த தம்பதியின் நண்பர் சால்மர்ஸ், என்பவர் பிபிசி ஊடகத்தின் நிகழ்ச்சியில் பேசியுள்ளார். இளவரசர் ஹாரி இங்கிலாந்து நாட்டின் இராணுவத்தில் பயிற்சி பெற்றபோது சால்மர்ஸும் ஹாரியும் நெருங்கிய நண்பர்களாக இருந்துள்ளனர்.

ஹாரியின் முடிவு குறித்து சால்மர்ஸ் கூறுகையில், ஹாரி எடுத்த முடிவைப் பார்க்கும்போது அவருடைய குடும்பத்தை முன்னிலைப்படுத்தி எடுக்கப்பட்டதாகவே நான் நினைக்கிறேன். ஏனெனில் அதுதான் அனைவருக்கும் மிகவும் முக்கியமான ஒன்று. ஒரு தந்தையாக ஒரு கணவனாக இந்த முடிவை எடுத்திருப்பார்.

அனைத்து தந்தை மற்றும் கணவருக்கும் தன் குழந்தை, மனைவியைப் பாதுகாக்க வேண்டும் என நினைப்பார்கள். அதிலும் ஹாரி மிகுந்த கொள்கை உடைய ஒரு நபர்.

ஊடகங்கள் அவரை பற்றி விவாதிப்பதை ஹாரி விரும்பவில்லை, பிற்காலத்தில் தன் மகன் கேட்கும் கேள்விகளுக்குப் பதில் அளிக்க வேண்டும்.

இவை அனைத்தும் தான் அரச குடும்பத்தில் உள்ள காரணத்தினாலேயே நடப்பதாக ஹாரி கருதுகிறார். இதன் காரணமாகவே அவர் குடும்பத்திலிருந்தும் மீடியாக்களிடம் இருந்தும் தன்னை விலக்கி சராசரி அப்பாவாக, கணவராக வாழ முடிவெடுத்திருப்பார் என்று கூறியுள்ளார்.

இதற்கு முன்னர் ஊடகங்கள் தங்களை வளர்த்து கொள்வதற்காக நாங்கள் எங்கு சென்றாலும், அதை செய்தியாக மாற்றிவிடுகின்றனர். தேவையில்லாத வதந்திகள் கிளம்பியதால் தான் என் அம்மாவை இழந்தேன், இப்போது ஊடகங்களால் நிம்மதியை நாங்கள் இழந்து கொண்டிருக்கின்றோம்.

இதனால் அரச குடும்ப வாரிசாக இல்லாமல், தனிப்பட்ட ஒரு மனிதனாக இருக்க விரும்புகிறேன் என்று ஹாரி கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்