பாலில் குழந்தைகளுக்கும் முதியவர்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் நோய்க்கிருமி: முக்கிய தகவல்!

Report Print Balamanuvelan in பிரித்தானியா

குழந்தைகளுக்கும் முதியவர்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தக் கூடிய நோய்க்கிருமியான ஈ.கோலை, குறிப்பிட்ட நிறுவனத்தின் பால் போத்தல்களில் இருப்பது தெரிய வந்துள்ளதையடுத்து, அந்த நிறுவன பாலை பயன்படுத்தவேண்டம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Lion Dairy & Drinks என்னும் நிறுவன தயாரிப்பான பாலில் ஈ.கோலை என்னும் கிருமி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

ஆகவே அந்த நிறுவன தயாரிப்பான Dairy Farmers 1L Full Cream பால் (25/02/2020 காலாவதி திகதி கொண்டது), மற்றும் Dairy Farmers 3L Full Cream பாலை (24/02/2020 காலாவதி திகதி கொண்டது) பயன்படுத்த வேண்டாம் என்றும், பயன்படுத்தாத பால் இருந்தால் உடனடியாக நிறுவனத்திடமே திருப்பிக் கொடுக்குமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த பால், New South Wales-யிலுள்ள Woolworths, Coles மற்றும் IGA பல்பொருள் அங்காடிகளிலிருந்து விற்கப்பட்டுள்ளது.

இந்த ஈ.கோலை கிருமி, பேதி, வயிற்று வலி, தலை சுற்றல், வாந்தியுடன், 5 முதல் 10 நாட்களுக்கு பாதிப்பு தொடருமானால், சிறுநீரக பாதை தொற்று மற்றும் நிமோனியா ஆகிய பிரச்சனைகளையும் ஏற்படுத்தக்கூடியது.

இதுவரை, வாடிக்கையாளர்களிடமிருந்து பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக எந்த புகாரும் வரவில்லையானாலும், இதுபோல் இனி நடக்காது என Lion Dairy & Drinks நிறுவனம் உறுதியளித்துள்ளது.

அத்துடன், பாலுக்கான முழு தொகையையும் திருப்பிக் கொடுப்பதாகவும் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த பாலை அருந்தி யாருக்காவது உடல் நலம் பாதிக்கப்பட்டிருக்குமானால் உடனடியாக மருத்துவரை அணுகுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளார்கள்.

குழந்தைகளுக்கும் முதியவர்களுக்கும் நோயெதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கும் என்பதால், இந்த ஈ.கோலை கிருமி அவர்களை எளிதில் பாதித்துவிடும் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்