எனக்கு காதலியாக ஒரு அழகான பெண் தேவை! தனிமை வாட்டுகிறது... பெரும் கோடீஸ்வரரின் வித்தியாசமான அறிவிப்பு

Report Print Raju Raju in பிரித்தானியா

பிரித்தானியாவை சேர்ந்த பெரும் கோடீஸ்வரர் தனக்கு அழகான காதலி தேவை என அறிவித்துள்ள நிலையில் சில விதிமுறைகளையும் கூறியுள்ளார்.

Portsmouth நகரை சேர்ந்தவர் Andy Scott (40). மிகப்பெரிய கோடீஸ்வரரான இவரின் சொத்து மதிப்பு £25 மில்லியன் ஆகும்.

தனிமையாக இருக்கும் Andy Scott-க்கு தன்னை போலவே சாகசங்கள் மற்றும் வித்தியாசமான விடயங்களை செய்யும் அழகான பெண் காதலியாக கிடைக்க வேண்டும் என ஆசை ஏற்பட்டுள்ளது.

இது குறித்து அவர் கூறுகையில், தனிமை என்னை வாட்டுகிறது, அது சோர்வாகவும், எதையோ இழப்பது போன்ற மனநிலையையும் தருகிறது. எனக்கு சிறப்புமிக்க பெண் காதலியாக வர வேண்டும் என விரும்புகிறேன்.

Twitter

அதாவது கோடையில் மத்திய தரைக்கடலை சுற்றி பயணம் செய்யவும் குளிர்காலத்தில் மலைகளில் பனிச்சறுக்கு செய்யவும் தைரியம் கொண்ட சாகச பெண்ணாக அவர் இருக்க வேண்டும்.

முன்னர் நான் ஒரு பெண்ணை காதலித்து மணந்தேன், ஆனால் நான் நினைத்த மாதிரி அவள் இல்லை என்பதால் பிரிந்துவிட்டேன் என கூறியுள்ளார்.

Andy Scott-யின் காதலியாக விரும்பும் பெண்ணுக்கு சில நிபந்தனைகளும் விதிக்கப்பட்டுள்ளது.

அதாவது அப்பெண்ணின் நிதி நிலை ஒராளவுக்காக நன்றாக இருக்க வேண்டும், எல்லா சமயங்களிலும் Andy அவருக்கு செலவு செய்யமாட்டார்.

காதலிக்க தொடங்கிய உடனேயே என்னால் பணத்தை செலவு செய்யமுடியாது, அப்படி செய்தால் அந்த உறவில் சமத்துவம் இருக்காது என கூறுகிறார் Andy.

Twitter

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers