கர்ப்பிணி பெண்ணின் Scan-ல் நாய் திரும்பி பார்ப்பது போல் தெரிந்த உருவம்!... வெளியான புகைப்படம்

Report Print Raju Raju in பிரித்தானியா

பிரித்தானியாவில் கர்ப்பிணி பெண்ணுக்கு Scan எடுத்து பார்த்த போது உள்ளே நாய் போன்ற முகத்தை கொண்ட உருவம் தலையை திருப்பி பார்ப்பது போல தெரிந்தது அவரை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

Jo Greer என்ற பெண் 20 வாரம் கர்ப்பமாக உள்ள நிலையில் மருத்துவமனைக்கு சென்று Scan பரிசோதனை செய்தார்.

அந்த பரிசோதனை அறிக்கையை பிரித்து பார்த்த போது Jo Greer அதிர்ச்சியடைந்தார்.

காரணம் அதில் குழந்தையின் முகம், மனித உருவத்தை விடவும் நாய் போன்ற உருவத்தோடு இருந்ததோடு, தலையை திருப்பி பார்ப்பதும் தெரிந்தது. பின்னர் இது குறித்து Jo Greer கூறுகையில், குழந்தையின் பாலினம் குறித்து தற்போது தெரிவிக்க விரும்பவில்லை.

முதலில் Scan காட்சியை பார்த்து அதிர்ந்தேன், காரணம் கமெராவை நோக்கி கருவில் உள்ள குழந்தை திரும்பி பார்ப்பது என்பது மிகவும் அபூர்வமான விடயம்.

ஆனால் பின்னர் அதை புரிந்து கொண்டு நானும் என் கணவரும் சிரித்தோம்.

யாருக்கு தெரியும்? இப்போதே தலையை திருப்பி விதவிதமான போஸ் கொடுக்கும் என் குழந்தை வருங்காலத்தில் பிரித்தானியாவின் பெரிய மொடலாக கூட வரலாம் என கூறியுள்ளார்.

swns

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers