கொரோனா தொற்றுநோய்க்கு பலியான முதல் பிரித்தானியர்!

Report Print Vijay Amburore in பிரித்தானியா

ஜப்பானில் தனிமைப்படுத்தப்பட்ட டைமண்ட் பிரின்சஸ் பயணக் கப்பலில் இருந்த பிரித்தானிய நபர் கொரோனா வைரஸால் உயிரிழந்திருப்பதாக செய்தி வெளியாகியுள்ளது.

கோவிட்-19 கொரோனா வைரஸ் காரணமாக ஜப்பான் துறைமுகத்தில் தனிமைப்படுத்தப்பட்ட டைமண்ட் பிரின்சஸ் பயணக்கப்பலில், பிரித்தானியர் ஒருவர் உயிரிழந்திருப்பதாக ஜப்பானிய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்த நபர் கப்பலில் பயணம் செய்தவர்களில் இறந்த ஆறாவது நபர் மற்றும் கொரோனாவிற்கு பலியான முதல் பிரித்தானியர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நபர் இன்னும் அடையாளம் காணப்படவில்லை மற்றும் இங்கிலாந்தின் வெளியுறவு மற்றும் காமன்வெல்த் அலுவலகம் இந்த அறிக்கையை ஆராய்ந்து வருவதாக தெரியவந்துள்ளது.

கப்பலில் இருந்த 78 பிரித்தானியர்களில் 32 பேர் விமானத்தின் மூலம் அவர்களுடைய நாட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அவர்களில் 4 பேர் மட்டும் தனிமைப்படுத்தப்பட்டிருந்தனர்.

கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 6 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பது பிரித்தானியாவில் கண்டறியப்பட்டது. இதனால் நாடு முழுவதும் வைரஸிற்கு எதிரான போராட்டத்தினை அதிகாரிகள் தீவிரமாக மேற்கொண்டு வரும் நிலையில், இந்த தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...