பிரித்தானியா 3 வாரம் முடக்கப்படுகிறது... போரிஸ் ஜான்சன் அதிரடி உத்தரவு! முக்கிய கட்டுப்பாடுகள்

Report Print Santhan in பிரித்தானியா

கொரோனா வைரஸை கட்டுப்படுத்துவதற்காக பிரித்தானியா மூன்று வாரம் முடக்கப்படுவதாகவும், மக்கள் தேவையில்லாமல் வெளியில் வரவேண்டாம் என்றும் பிரதமர் போரிஸ் ஜான்சன் அறிவித்துள்ளார்.

பிரித்தானியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 6,650-ஐ தொட்டுள்ளது. 335 பேர் உயிரிழந்துள்ளனர். நாளுக்கு நாள் உயிரிழப்பு அதிகமாகுவதே தவிர குறையாததால், சில முக்கிய முடிவுகளை அரசு எடுத்துள்ளது.

அதன் காரணமாக மூன்று வாரங்கள் பிரித்தானியா முடக்கப்படுவதாக பிரதமர் போரிஸ் ஜான்சன் தெரிவித்துள்ளார்.

மேலும், அவர் சில நிபந்தனைகள் மற்றும் கட்டுப்பாடுகளை கூறியுள்ளார். அதில், மக்கள் அவசியமான பொருட்களை வாங்க வீட்டை விட்டு வெளியேற முடியும்.

உதாரணமாக , நாள் ஒன்றிற்கு(ஒரு முறை) உடற்பயிற்சி செய்ய அனுமதிக்கப்படுவர். எந்தவொரு மருத்துவத் தேவையும் மற்றும் பாதிக்கப்படக்கூடிய நபருக்கு உதவுவதற்கு செல்ல முடியும்.

அமைச்சரவை அமைச்சர்களுடனான சந்திப்பைத் தொடர்ந்து இதை போரிஸ் ஜான்சன் அறிவித்துள்ளார். மேலும் நீங்கள் நண்பர்களைச் சந்திக்கக்கூடாது.

உங்கள் வீட்டில் வசிக்காத குடும்ப உறுப்பினர்களை நீங்கள் சந்திக்கக்கூடாது. உணவு மற்றும் மருந்து போன்ற அத்தியாவசியங்களைத் தவிர நீங்கள் கடைக்குச் செல்லக்கூடாது.

இதை உங்களால் முடிந்தவரை செய்ய வேண்டும். உங்களால் முடிந்த இடத்தில் உணவு விநியோக சேவைகளைப் பயன்படுத்துங்கள்.

விதிகளைப் பின்பற்றாவிட்டால், அபராதம் கட்ட நேரிடும். அத்தியாவசியமற்ற பொருட்களை விற்கும் கடைகள் மூடப்படும்.

அத்துடன் நூலகங்கள், விளையாட்டு மைதானங்கள் மற்றும் வழிபாட்டுத் தலங்கள். ஒரே வீட்டில் உள்ளவர்களைத் தவிர்த்து, பொதுவில் இரண்டுக்கும் மேற்பட்டவர்கள் கூடுவது தடைசெய்யப்படும்.

திருமணங்கள், ஞானஸ்நானம் மற்றும் பிற விழாக்கள் நிறுத்தப்படும். ஆனால் இறுதிச் சடங்குகளைத் தவிர்த்து என்று கூறியுள்ளார்.

மேலும், எளிமையாக சொல்ல வேண்டும் என்றால், ஒரே நேரத்தில் அதிகமாக மக்கள் உடல்நிலை சரியில்லாமல் போனால், NHS அதை கையாள முடியாது. நோய் பரவுவதை குறைப்பது மிக முக்கியம் என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...