எனக்கு பயமாக இருக்கிறது... மருந்துகள் இல்லை! லண்டன் செல்ல முடியாமல் தவிக்கும் தம்பதி

Report Print Santhan in பிரித்தானியா

லண்டனில் இருந்து இந்தியா வந்த தம்பதி தற்போது ஊரடங்கு உத்தரவு காரணமாக, திரும்பி செல்ல முடியாமல் வீட்டில் முடங்கி கிடக்கும் நிலையில், அவர்கள் வேதனையுடன் சில தகவல்களை பகிர்ந்துள்ளனர்.

இந்தியாவில் வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸ் காரணமாக, அந்நாட்டு பிரதமர் மோடி 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ளார்.

மக்கள் தயவு செய்து யாரும் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம், நோயின் தீவிரம் அதிகமாகி வருகிறது என்று தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் பிரபல ஆங்கில ஊடகமான மெட்ரோ கோ யூகே, லண்டனில் இருந்து மருமகளின் திருமணத்திற்காக கடந்த 2-ஆம் திகதி இந்தியா வந்த Deepikaben(53) மற்றும் Chiragkumar Patel(34) இவர்களிடம் நிலைமை குறித்து கேட்டுள்ளது.

இவர்கள் இருவரும், Leytonstone-ல் இருக்கும் Whipps Cross மருத்துவமனையிலும், Ilford-ல் இருக்கும் King George மருத்துவமனையிலும், மருத்துவ உதவியாளர்களாக பணியாற்றி வருகின்றனர்.

இந்தியாவில் ஊரடங்கு உத்தரவு போடப்பட்டிருக்கும் நிலையில், இவர்கள் தங்கள் விமானம் குறித்து எமிரேட்ஸ் விமான நிறுவனத்திடமிருந்து பதிலைப் பெற முயற்சித்து வருகின்றனர். ஆனால் விமான நிறுவனத்திடம் இவர்கள் பதில் பெற முடியாத சூழ்நிலையில் உள்ளனர்.

இந்நிலையில் Deepikaben கூறுகையில், நான் ஆஸ்துமா மற்றும் தைராய்டுக்கு HRT மற்றும் மருந்துகளை எடுத்து வந்துள்ளேன்.

இந்தியாவில் நீண்ட காலம் தங்குவதற்கு என்னிடம் போதுமான மருந்து இல்லை. எனக்கு பயமாக இருக்கிறது. நான் என் குழந்தைகள் மற்றும் பேரக்குழந்தைகளுக்காக வீட்டிற்கு செல்ல விரும்புகிறேன். என் ஆஸ்துமா மோசமடைந்து வருவதால் அவர்கள் எங்களைப் பற்றி மிகவும் கவலைப்படுகிறார்கள்.

என்னால் தூங்க முடியாது, நான் அழுதுகொண்டே இருக்கிறேன். நான் மிகவும் வருத்தமாக இருப்பதால், என்னுடைய தைராய்டு நிலையும் பாதிக்கப்பட்டுள்ளது.

நான் ஒருபோதும் இனி இந்தியாவுக்கு வரமாட்டேன் என்றே விரும்புகிறேன். எங்களிடம் இங்கு எந்தவிதமான பொருட்களும் இல்லை. எனது மருந்துக்காகவாது நான் திரும்பிச் செல்ல வேண்டும். நாங்கள் எங்கள் வேலைகளுக்கு திரும்பிச் செல்ல வேண்டும். எங்களுக்கு நிறைய பொறுப்புகள் உள்ளன.

லண்டனில் 35 ஆண்டுகளாக வசித்து வருகிறேன், எனக்கு பிரித்தானிய பாஸ்போர்ட் உள்ளது. நான் இருக்க வேண்டிய இடம் அங்கு தான் என்று கூறியுள்ளார்.

மேலும்,தம்பதியினர் பிரித்தானிய தூதரகத்தை தொடர்பு கொள்ள முயற்சித்துள்ளனர். ஆனால், எந்த ஒரு பதிலும் இல்லை.

இந்தியா 21 நாட்கள் முடக்கப்படுவதால், தற்போதைக்கு அவர்கள் தங்கியிருக்கும் வீட்டை விட்டு வெளியேற முடியாது என்று அவர்கள் அஞ்சுகிறார்கள். வீட்டிற்கு ஒரு வழியைக் கண்டுபிடிப்பதில் பிரித்தானிய பிரஜைகளுக்கு ஆதரவளிக்க இந்திய அதிகாரிகளுடன் இணைந்து செயல்படுவதாக FCO கூறுகிறது.

மேலும், அவசரமாக இங்கிலாந்து திரும்ப முயற்சிக்கும் எவரும் Conqry.Newdelhi@fco.gov.uk-ல் அவர்களின் முழு பெயர், பிறந்த தேதி, பாஸ்போர்ட் எண், விசா தகவல் மற்றும் இந்தியாவில் சரியான இருப்பிடத்துடன் தொடர்பு கொள்ள வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...