இளவரசர் சார்லஸிற்கு கொரோனா! மகாராணியார் குறித்து பக்கிங்ஹாம் அரண்மனையின் அறிக்கை

Report Print Santhan in பிரித்தானியா

இளவரசர் சார்லஸிற்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதால், மகாராணியார் தொடர்பில் பக்கிங்ஹாம் அரண்மனை தெளிவான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

பிரித்தானியாவில் கொரோனாவின் தீவிரம் எந்த அளவிற்கு இருக்கிறது என்பதை நாட்டு மக்கள் உணர்ந்திருப்பார்கள் என்று நம்பப்படுகிறது.

ஏனெனில் நாட்டில் மிகவும் முக்கியமான நபரும், அதிக பாதுகாப்பும் கொண்ட இளவரசர் சார்லஸையே கொரோனா பிடித்துவிட்டது.

ஆனால் அவருக்கு லேசான அறிகுறிகள் மட்டுமே என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் இளவசர் இதற்கு முன்னர் யார் எல்லாம் பார்த்தார்? அவர்களுக்கு கொரோனா பாதிப்பு இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்தது.

அதில் இணையவாசிகள் பலரும் மகாராணியார் நிலை என்ன என்று தான் கேள்வி எழுப்பினர்.

அது குறித்து பக்கிங்ஹாம் அரண்மனை வெளியிட்டுள்ள அறிக்கையில், மகாராணியார் தற்போது நல்ல ஆரோக்கியத்துடன் இருக்கிறார்.

அவர் இளவரசர் சார்லஸை கடைசியாக மார்ச் 12-ஆம் திகதி காலையில் பார்த்தார். இதைத் தொடர்ந்து நாங்கள் வேறு எந்த கருத்தும் தெரிவிக்க விரும்பவில்லை. ராணியார் அவரது நலன் தொடர்பாக பொருத்தமான அனைத்து ஆலோசனைகளையும் பின்பற்றி வருவதாக குறிப்பிட்டுள்ளது.

மேலும் இளவரசர் சார்லஸின் மருத்துவர்கள் மார்ச் 13-ஆம் திகதிக்கு முன்னர் அவர் பாதிக்கப்பட்டிருக்க வாய்ப்பில்லை, அதற்கு பின்னர் தான் வாய்ப்பிருக்கலாம் என்று நம்புவதாக தெரிவித்துள்ளதால், மகாராணி 12-ஆம் திகதி தான் இளவரசரை சந்தித்துள்ளதால், நிச்சயமாக மாகாரணிக்கு கொரோனா பாதிப்பு வர வாய்ப்பே இல்லை என்று கூறப்படுகிறது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்