பிரித்தானியாவில் அமலுக்கு வரும் புதிய விதிமுறைகள்..!

Report Print Basu in பிரித்தானியா

பிரித்தானியா ரயில் நிலையங்கள் கூட்டத்தைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக புதிய விதிமுறைகள் அமல்படுத்துகின்றன.

ரயிலில் பயணிகளிடையே இடைவெளி கடைபிடிக்கும் வகையில் குறிப்பிட்ட இருக்கைகளில் யாரும் உட்காராத படி தடுக்கப்படும், வண்டிகள் ஆரம்பத்தில் நிரம்பினால் ஒவ்வொரு நிறுத்தத்திலும் நிறுத்தக்கூடாது என்பதும் இந்த நடவடிக்கைகளில் அடங்கும்.

மேலும் தீவிரமான நடவடிக்கைகளும் ஆலோசனையில் உள்ளன. பயணிகள் ரயில் நிலையத்திற்கு வரும்போது நேர இடங்களை முன்பதிவு செய்ய வேண்டும்.

இல்லையெனில் அவர்கள் ரயில் ஏற அனுமதிக்கப்படமாட்டார்கள் அல்லது ரயிலில் நிலையத்திற்குள் நுழைய அனுமதிக்கப்படமாட்டார்கள்.

தற்போது, வீட்டிலிருந்து வேலை செய்ய முடியாதவர்கள் மட்டுமே தங்கள் பணியிடத்திற்குத் திரும்ப அறிவுறுத்தப்படுகிறார்கள்.

வேறு வழியே இல்லாத தொழிலாளர்கள் பொது போக்குவரத்தைப் பயன்படுத்துமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்