பிரித்தானிய தம்பதியின் காருக்குள் பொலிசார் கண்ட காட்சி: தூக்கத்தில் இருந்த ஒரு வயது குழந்தை

Report Print Arbin Arbin in பிரித்தானியா

பிரித்தானிய தம்பதி ஒன்று தங்கள் காருக்குள் ரகசியமாக தாயார் மற்றும் அவரது மகனை சட்டவிரோதமாக பிரித்தானியாவுக்கு கொண்டுவர மேற்கொண்ட முயற்சி பொலிசாரால் முறியடிக்கப்பட்டுள்ளது.

Coquelles பகுதியில் சேனல் சுரங்கப்பாதை அருகே பிரித்தானிய எல்லைப் படை அதிகாரிகளால் வழக்கமான சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார் பிரித்தானியரான விக்டோரியா-எலெனா டியூடர் என்ற பெண்மணி.

அப்போது அவரது காருக்குள் எல்லைப் படை அதிகாரிகள் ஒரு அல்பேனிய பெண்மணியையும் ஒரு சிறுவனையும் காருக்குள் மறைவாக இருந்ததை கண்டுபிடித்தனர்.

மட்டுமின்றி அதே காருக்குள் டியூடரின் ஒருவயது குழந்தை தூக்கத்தில் இருந்துள்ளது.

இது சட்டவிரோத நடவடிக்கை என பிரித்தானிய தம்பதி ஒப்புக்கொண்டதை அடுத்து, கேன்டர்பரி கிரவுன் நீதிமன்றம் டியூடரின் கணவருக்கு 20 மாத சிறை தண்டனையும் டியூடருக்கு எச்சரிக்கையுடன் கூடிய 20 மாத தண்டனையும் வழங்கி தீர்ப்பு வழங்கியுள்ளது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்