பிரித்தானியா அரண்மனையிலிருந்து திருட்டுப்போன பொருட்கள் ஒன்லைனில் விற்பனையானதால் அதிர்ச்சி: சிக்கிய மகாராணியாரின் வேலையாள்!

Report Print Balamanuvelan in பிரித்தானியா

பிரித்தானியா அரண்மனையிலிருந்து இந்த வருட துவக்கத்தில் தொடர்ந்து பொருட்கள் காணாமல் போவதாக பொலிசாருக்கு தகவலளிக்கப்பட்டது.

இந்நிலையில், இணையதளம் ஒன்றில் அரண்மனையிலிருந்து காணாமல் போன பொருட்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டதைக் கண்டவர்கள் அது குறித்து தெரியப்படுத்தியிருக்கிறார்கள்.

அரண்மனையில் அவ்வப்போது சிறிய பொருட்கள் காணாமல் போவது சகஜம்தான், ஆனால், அரண்மனையிலுள்ள அனைத்துப் பணியாளர்களுக்கும் தலைவரான துணை அட்மிரல் Tony Johnstone-Burt OBEக்கு வழங்கப்பட்ட உயரிய விருது ஒன்றே திருடுபோன சம்பவம் கவலையை அளித்துள்ளது.

இது குறித்து பொலிசார் விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், eBay இணையதளத்தில் அந்த விருது 350 பவுண்டுகளுக்கு விற்பனைக்கு வந்துள்ளதைக் கண்டு அதிர்ச்சியடைந்த சிலர் பொலிசாருக்கு தகவலளித்துள்ளனர்.

அதன்படி, அந்த விருதை விற்க முயன்ற அரண்மனை ஊழியர் ஒருவர், அவர் மகாராணியாரின் வேலையாள், கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட அந்த 37 வயது நபர், ஆறு ஆண்டுகளாக அரண்மனையில் வேலை செய்துவந்துள்ளார்.

அவர், சமூக ஊடகங்களில், தான் அரண்மனைக்குள் சென்று வருவதைக் குறித்து பெருமையடித்துக்கொள்ளும் வழக்கம் கொண்டவராம்.

அத்துடன், தான் இளவரசர் ஹரி மேகன் முதலானோரின் திருமணத்துக்கு அழைக்கப்பட்டது குறித்தும் பெருமையடித்துகொண்டதுண்டாம்.

அவரது அடையாளங்கள் வெளியிடப்படாத நிலையில், பொலிசார் தொடர்ந்து அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்