வடகொரியா தொடர்பில் பிரித்தானிய இளைஞர்களுக்கு எச்சரிக்கை: தகவல்கள், பணம் பத்திரம்

Report Print Arbin Arbin in பிரித்தானியா
257Shares

பன்னாட்டு நிறுவனங்கள் பெயரில் வேலைவாய்ப்பு உறுதியளிக்கும் மின் அஞ்சல் இணைப்புகள் மூலம் பிரித்தானிய இளைஞர்களிடம் மோசடியில் ஈடுபட வடகொரியா முயற்சி மேற்கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

உயர் ரகசிய பாதுகாப்பு மற்றும் விண்வெளித் துறை சார்ந்த வேலைகளை எதிர்பார்க்கும் இளைஞர்களைக் குறிவைக்க போலியான ஆனால் மிகவும் நம்பத்தகுந்த லிங்க்ட்இன் கணக்குகள் பயன்படுத்தப்படுகின்றன என்று விசாரணை அதிகாரிகள் கூறுகின்றனர்.

வட கொரிய ‘லாசரஸ்’ குழுவின் பிரச்சாரம் இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்து நடந்து வருகிறது என பிரித்தானிய சைபர் பாதுகாப்பு நிறுவனம் Clear Sky எச்சரித்துள்ளது.

மேலும் பிரித்தானியாவின் முதன்மை நிறுவனங்களில் ஒன்றின் பெயரில் ஏற்கனவே வடகொரியா போலியான வேலைவாய்ப்பு இணைப்புகளை அனுப்பி வருவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு இஸ்ரேலின் அதிமுக்கிய நிறுவனங்கள் சிலவற்றில் ஊடுருவிய வடகொரிய குழு, தற்போது அதே பாணியை உலக அளவில் முன்னெடுத்து வருகிறது.

எங்கள் மதிப்பீட்டில், இஸ்ரேல் மற்றும் உலகளவில் பல டஜன் நிறுவனங்கள் மற்றும் அமைப்புகளை ஊடுருவி பாதிப்பை ஏற்படுத்துவதில் எங்கள் குழு வெற்றி பெற்றுள்ளது என்று லாசரஸ் அமைப்பு தெரிவித்துள்ளது.

ஒரு நிறுவனத்தை ஹேக் செய்ய முடிந்ததும், லாசரஸ் குழு ரகசிய தகவல்களை சேகரித்து பணத்தையும் திருட முயற்சிக்கின்றனர் என்கிறார்கள் Clear Sky நிர்வாகத்தினர்.

அணுசக்தி திட்டத்திற்கு நிதியளிப்பதற்கான ஒரு வழியாக வடகொரிய பண திருட்டு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகிறது.

இதற்கு அரசாங்கத்தின் முழு ஒத்துழைப்பும் அளிக்கப்படுகிறது. மட்டுமின்றி பண திருட்டை ஒரு சேவையாகவே மேற்கொள்ளப்படுகின்றன என்கிறார்கள் புலனாய்வு அதிகாரிகள்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்