கொரோனாவால் கோமாவில் இருந்த தாய்... நீரில் மூழ்கி இறந்த புதுமாப்பிள்ளை: ஒரே குடும்பத்தில் மீண்டும் ஒரு துயரம்!

Report Print Balamanuvelan in பிரித்தானியா
241Shares

திருமணம் ஆகி சில வாரங்களே ஆன மகன் நீரில் மூழ்கி இறந்தது கூட தெரியாமல் கொரோனாவால் கோமாவில் இருந்துள்ளார் ஒரு பிரித்தானிய தாய்.

நதி ஒன்றில் நீந்தச் சென்ற Muhammad Bilal Zeb (18) தண்ணீரில் மூழ்க, அக்கம் பக்கத்திலிருந்தவர்கள் எவ்வளவோ முயன்றும் அவரைக் காப்பாற்ற முடியவில்லை.

அந்த நேரத்தில் Bilalஇன் தாய் Saima Bashir கொரோனாவால் பாதிக்கப்பட்டு கோமாவில் இருந்ததால், மகன் இறந்தது அவருக்கு தெரியாது.

புது மனைவியையும், கொரோனாவால் பாதிக்கப்பட்ட தாயையும் விட்டு Bilal பிரிந்த நிலையில், அந்த குடும்பத்தில் மீண்டும் ஒரு மரணம் நிகழ்ந்துள்ளது.

Bilalஇன் தாய் Saima, கொரோனாவிலிருந்து விடுபடாமலே, தன் மகன் இறந்தது கடைசி வரை தெரியாமலே உயிரிழந்துவிட்டார்.

ஒரு மாத காலத்திற்குள்ளேயே குடும்ப உறுப்பினர்கள் இருவரை இழந்து தவிக்கும் அந்த குடும்பத்திற்கு மக்கள் தங்கள் இரங்கல்களை தெரிவித்துவருகிறார்கள்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்