லண்டனில் சாலையில் சென்ற இளைஞனின் பொறுப்பற்ற நடத்தையால் பெண்ணுக்கு நேர்ந்த விபரீதம்! வெளியான முழு பின்னணி

Report Print Raju Raju in பிரித்தானியா
271Shares

லண்டனில் போதை மருந்துகளை அதிகளவில் உட்கொண்டு காரை தவறான பாதையில் ஓட்டி பெண் படுகாயமடைய காரணமாக இருந்த நபருக்கு இரண்டாண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

லண்டனின் Sevenoaks பகுதியில் தான் இந்த சம்பவம் கடந்த பிப்ரவரி மாதம் 8ஆம் திகதி நடந்துள்ளது.

Aurimas Stipinas (26) என்ற இளைஞன் கொக்கெயின் மற்றும் கஞ்சா போதை பொருட்களை அதிகளவில் உட்கொண்டு போதையில் காரை சாலையின் எதிர்பக்கத்தில் தவறான பாதையில் இயக்கியுள்ளார்.

அப்போது எதிரில் வந்த காரின் மீது Aurimas Stipinasன் கார் வேகமாக மோதியது.

இதில் அந்த காரில் இருந்த பெண்ணுக்கு படுகாயம் ஏற்பட்டது. மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவருக்கு பின்பக்கம் முழுவதும் படுகாயம் ஏற்பட்டது தெரியவந்தது.

அதே போல Aurimasக்கு கால்களில் காயம் ஏற்பட்டது.

இதன்பின்னர் கைது செய்யப்பட்ட Aurimasயிடம் வாகனம் ஓட்டுவதற்கான இன்சுரன்ஸ் இல்லை எனவும் தெரியவந்தது.

மேலும் அவர் இரத்தத்தில் அதிகளவு போதை மருந்துகள் இருப்பதும் பரிசோதனையில் கண்டறியப்பட்டது.

அவர் மீதான வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் தற்போது இரண்டாண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

இதோடு Aurimas மூன்று ஆண்டுகளாக வாகனம் ஓட்டுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இது குறித்து விசாரணை அதிகாரி Belinda Crof கூறுகையில், Aurimasன் பொறுப்பற்ற நடத்தையால் ஆபத்தான விளைவுகளை ஏற்படுத்தியது.

இது போன்ற சம்பவத்தில் காயமடைபவர்கள் வாழ்நாள் முழுவதும் ஆரோக்கியத்தை இழந்து அது அவர்களின் வாழ்வையே புரட்டி போட்டுவிடுகிறது என கூறியுள்ளார்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்