இங்கிலாந்தில் ஒரே பகுதியில் இரண்டாவது முறையாக உலுக்கிய நிலநடுக்கம்: பீதியில் உறைந்த மக்கள்

Report Print Arbin Arbin in பிரித்தானியா
516Shares

இங்கிலாந்தின் பெட்ஃபோர்ட்ஷையர் பகுதியில் ஒரே வாரத்தில் இரண்டாவது முறையாக நிலநடுக்கம் தாக்கியுள்ள சம்பவம் அப்பகுதி மக்களை பீதியில் ஆழ்த்தியுள்ளது.

பெட்ஃபோர்ட்ஷையரில் உள்ள லைட்டன் பஸார்ட்டில் பொதுமக்கள் ஞாயிற்றுக்கிழமை இரவு இந்த நிலநடுக்கத்தை உணர்ந்ததாக தங்களுக்கு தகவல் கிடைத்துள்ளதாக பிரித்தானிய புவியியல் ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

கடந்த 8 ஆம் திகதி இதே பகுதியில் ரிக்டர் அளவில் 3.5 என நிலநடுக்கம் பதிவான நிலையில், தற்போது 2.1 என்ற ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

பலரும் தங்களது குடியிருப்புகள் அதிர்ந்ததாக கூறியுள்ளனர். இருப்பினும் கடந்த 8 ஆம் திகதியை விடவும் குறைந்த அளவு தாக்கமே காணப்பட்டதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.

ஆனாலும் இந்த நிலநடுக்கம் தங்களை தூக்கத்தில் இருந்து எழுப்பியதாக பலர் தெரிவித்துள்ளனர்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்