லண்டனில் பயங்கரம்! கார்களை மோதிவிட்டு வீட்டின் உள்ளே பாய்ந்த லொறி: டிரைவர் பலி உயிருக்கு போராடும் 11 வயது சிறுவன்

Report Print Santhan in பிரித்தானியா

பிரித்தானியாவில் லொறி ஒன்று கார்கள் மீது மோதிவிட்டு, வீடு ஒன்றின் மீது பாய்ந்த சம்பவத்தின் டிரைவர் உயிரிழந்துவிட்டதாகவும், 11 வயது சிறுவன் உயிருக்கு போராடி வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பிரித்தானியாவின் தலைநகரான லண்டனின் Kidbrooke பகுதியிலுள்ள சாலை ஒன்றில் காலை போக்குவரத்து பரபரப்பாக இயங்கிக்கொண்டிருக்கும் நேரத்தில், வேகமாக வந்த லொறி ஒன்று இரண்டு கார்கள் மீது மோதிவிட்டு, அருகிலுள்ள வீடு ஒன்றிற்குள் பாய்ந்தது.

இதில் 29 வயது மதிக்கத்தக்க டிரைவர் உயிரிழந்த நிலையில், 11 சிறுவன் மருத்துவமனையில் உயிருக்கு போராடி வருகிறான். இந்த விபத்து காரணமாக வீட்டில் இருந்த யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

இருப்பினும் இந்த சம்பவம் காரணமாக, மொத்தம் 6 பேருக்கு காயம் ஏற்பட்டுள்ளது. இதில் இரண்டு ஆண்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.

வீட்டின் உரிமையாளரான நிகோ என்ற 55 வயது நபர், வீட்டின் மேல் அறையில் இருந்த போது, இந்த விபத்தின் சத்தத்தைக் கேட்டு எழுந்துள்ளார்.

அவர், நான் அதிர்ச்சியில் இருக்கிறேன், நான் உணர்ச்சியற்றவனாக உணர்கிறேன். நான் உயிருடன் இருப்பது அதிர்ஷ்டம் என்று நினைக்கிறேன்.

ஆனால் நிச்சயமாக மிகவும் துரதிர்ஷ்டவசமானது, யாரோ ஒருவர் இறந்துவிட்டார் என்பதை கேட்கும் போது துயரமாக இருக்கிறது.

லொறியின் ஓட்டுனருக்கு மாரடைப்பு ஏற்பட்டதன் காரணமாக இந்த விபத்து ஏற்பட்டுவிட்டதாக கேள்விபட்டேன்,

காயமடைந்து மருத்துவமனையில் உயிருக்கு போராடி வரும் குழந்தை தனது அப்பாவுடன் ஒரு காரில் இருந்திருக்கலாம் என்று நினைக்கிறேன். அவர் நன்றாக இருக்கிறார் என்று நான் நம்புகிறேன் என்று கூறியுள்ளார்.

(Image: PA)

வீட்டிற்கு அருகில் வசிக்கும் 37 வயது மதிக்கத்தக்க ரோஸி சாதா, ஒரு மிகப் பெரிய சத்தம், அது வீடு இடிந்து விழும் சத்தம் போன்று இருந்தது. இதனால் வெளியில் வந்து பார்த்த போது, சிறுவன் ஒருவனை ஸ்ட்ரட்சரில் கொண்டு செல்கின்றனர்.

அவனது பள்ளி உடைகள் தரையில் இருந்தன, துணை மருத்துவர்கள் அவனின் உயிரை காப்பாற்ற முயல்கின்றனர். அவருக்காக விமான ஆம்புலன்ஸ் வந்தது.

சிறுவனுடன், இரத்தம் கொண்ட ஒரு மனிதர் இருந்தார், அதுதான் அந்தச் சிறுவனின் அப்பா என்று தான் நினைக்கிறேன் என்று கூறியுள்ளார்.

இந்த சம்பவம் குறித்து பொலிசார் கூறுகையில், இது ஒரு அதிர்ச்சிகரமான சம்பவம். எனது எண்ணங்கள் சம்பந்தப்பட்டவர்களிடமும் அவர்களுடைய அன்புக்குரியவர்களிடமும் உள்ளன.

(Image: Philip Coburn)

என்ன நடந்தது என்பது குறித்து நாங்கள் விரிவான விசாரணைகளை மேற்கொண்டு வருகிறோம். மேலும் சாட்சிகளிடமிருந்தும், சிசிடிவி காட்சிகள் உள்ளவர்களிடமிருந்தும் இந்த சம்பவம் குறித்து அறிய காத்திருக்கிறோம்.

என்ன நடந்தது என்பதை கண்டுபிடிக்க மக்கள் நீங்கள் உதவுங்கள் என்று கூறியுள்ளார்.

ஸ்காட்லாந்து யார்டு செய்தி தொடர்பாளர் கூறுகையில், சரியாக காலை உள்ளூர் நேரப்படி காலை 8.05 மணிக்கு லண்டன் அம்புலன்சிற்கு இந்த சம்பவம் குறித்து அழைக்கப்பட்டது.

(Image: Philip Coburn)

குறித்த சம்பவத்தால், 11 வயது குழந்தை மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. அவர்களின் நிலை உயிருக்கு ஆபத்தானது என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இரண்டு ஆண்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். அவர்களின் நிலை குறித்து இன்னும் தெரியவில்லை.

(Image: Philip Coburn)

துரதிர்ஷ்டவசமாக ஒரு நபர் இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளார். இதற்கிடையில் லொறி விபத்து நடந்த இடத்தின் வீடியோ காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்