உயிர்களை பாதுகாக்க... கொரோனாவுக்கு எதிராக போராட பிரித்தானியாவில் புதிய தொழில்நுட்பம் அறிமுகம்!

Report Print Basu in பிரித்தானியா

பிரித்தானியாவில் கொரோனாவுக்கு எதிராக போராடி வரும் என்.எச்.எஸ்-க்கு உதவும் வகையில் ட்ரோன் தொழில்நுட்பம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

சுகாதார ஊழியர்களுக்கான தனிப்பட்ட பாதுகாப்பு உபகரணங்கள் மற்றும் கொரோனா வைரஸ் சோதனைக் கருவிகளைக் கொண்ட செல்ல மின்சார ட்ரோன்கள் பயன்படுத்தப்படவுள்ளது.

இங்கிலாந்து விண்வெளி ஏஜென்சி-யின் ஆதரவைப் பெற்ற பின்னர் விரைவில் என்ஹெச்எஸ் மருத்துவமனைகளுக்கு இடையில் ட்ரோன்கள் பொருட்களை கொண்டு செல்ல பயன்படுத்தப்படும்.

என்ஹெச்எஸ் ஊழியர்களால் நிறுவப்பட்ட அபியன், மின்சார ட்ரோன்களுக்கான பாதுகாப்பான வான் பாதைகளின் வலையமைப்பை நிறுவுவதை நோக்கமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது.

கொரோனாவுக்கு எதிராக போராட உதவ ட்ரோன்களைப் பயன்படுத்துவது காத்திருப்பு நேரங்களைத் தவிர்க்கும், என்.எச்.எஸ் ஊழியர்களின் வேலை பளுவை குறைக்கும், தேவையற்ற உடல் தொடர்புகளைக் குறைக்கும் மற்றும் வைரஸின் இரண்டாம் நிலை பரவும் அபாயத்தைக் குறைக்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

என்.எச்.எஸ் விநியோக தளவாடங்களில் உள்ள சவால்களை கொரோனா வெளிக்காட்டுகிறது என அப்பியனைச் சேர்ந்த கிறிஸ்டோபர் லா கூறினார்.

telegraph

மருத்துவப் பொருட்களைக் கொண்டு செல்வதற்கான வேகமான, நம்பகமான மற்றும் சுற்றுச்சூழலுக்கு பாதுகாப்கான முறையை உருவாக்க ஒரு சிறந்த நேரம் இருந்ததில்லை. தற்போது அதற்கான நேரம் வந்துள்ளது என கிறிஸ்டோபர் லா கூறினார்.

telegraph

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்